Saturday, August 14, 2021

75வது சுதந்திர தின வாழ்த்துக்கள் - வாழ்க பாரதம்! வளர்க தமிழகம்!

 இந்திய மக்களாகிய நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். அடிமை வாழ்வைவிட துக்கம் தருவது வேறொன்றுமில்லை. அதுபோல சுதந்திரம் பெறுவதைவிட மகிழ்ச்சி தருவதும் மற்றொன்று இல்லை. இந்த உண்மையை உணர்ந்துதான் சுதந்திர நாளை நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

ஆராயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்துவந்த - சில ஆயிரம் பேர்களையே கொண்டிருந்த - பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அடிமை பெற காரணம், அவர்கள் நம்மிடையே இருந்த பிளவுகளையும், பிரிவுகளையும் பயன்படுத்திக் கொண்டதுதான்.
கண்ணாடியும், சீப்பும் விற்க வந்த வணிகக் கூட்டம் மன்னாளவும் ஆசைப்பட்டது. பல கோடிக்கானக்கான இந்தியர்களை சில ஆயிரகணக்கான ஆங்கிலேயர்கள் ஆடிமைப்படுத்தினர். நூற்றுக்கணக்கான இந்திய அரசர்கள் ஒரு அந்நிய கம்பெனிக்கு அடிமைப்பட நேர்ந்தது. இன்று நினைத்தாலும் நெஞ்சு வேதனைப்படுகிறது.
இந்தியாவை அடிமைப்படுத்தியது ஒரு கம்பெனி என்று சொன்னோம், அது தவறு.பல கம்பெனிகள் பாரதத்திற்குள் புகுந்து இந்தப் பெருநாட்டை பங்கு போட்டுக் கொண்டன. அவை பிரிட்டிஷ் கம்பெனி, டச்சுக் கம்பெனி, போர்ச்சுக்கீசிய கம்பெனி, பிரெஞ்சுக் கம்பெனி என்பவனாகும். அந்தக் கம்பெனிக்களிடையேயும் இந்த மண்ணில் போர் நிகழ்ந்தது. அந்நியக் கம்பெனிகளை எதிர்த்து உள்நாட்டு மக்கள் போர் தொடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, புகுந்த கம்பெனிகள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டன. அந்தப் போரின் முடிவிலே ஒரு கம்பெனி இந்தியாவின் மீது ஏகபோக ஆதிக்கம் பெற்றது. அது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாகும்.
அரை நூற்றாண்டுக்காலம் அந்தக் கம்பெனி, தட்டிக்கேட்பாரின்றித் தனியாட்சி நடத்தியது. பின்னர், ஒரு கட்டபொம்மன் தோன்றி விடுதலைப் போர் தொடங்கினான். அதற்கு 60 ஆண்டுகள் கழித்து, காந்திமகான் தோன்றி அந்நிய சாம்ராஜ்யத்தை எதிர்த்து அறப்போர் நிகழ்த்தினார்.அது தொடர்ந்து கால் நூற்றாண்டுக்காலம் நடந்த பின்னர்தான் ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை பெற்றது.
லார்டு கிளைவு தொடங்கி லார்டு மவுண்ட் பேட்டன் காலம்வரை பிடித்திருந்த பிரிட்டிஷ் கிரகணத்திலிருந்து விடுபட்ட நாள் ஆகஸ்ட் பதினைந்து! "கதிரவன் அஸ்த்தமிக்காத பேரரசு" என்று தற்பெருமை பேசிய பேரரசை அஸ்தமிக்கச் செய்த நாள் ஆகஸ்ட் பதினைந்து!
பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றதன் விளைவாகத்தான் பாரதம் தனக்கென ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை தானே தயாரித்துக் கொண்டு அதை நடைமுறைப்படுத்த முடிந்தது.
நம் பாரத தேசம் சுதந்திரம் பெறுவதற்காக பாடுப்பட்டு, ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு, நாடு கடத்தப்பட்டும், தூக்கு தண்டனையால் ஆவிதுறந்தும், ஆண்டுக்கணக்கில் சிறை வாசம் பெற்று, உடல்நலமிழந்து, சொத்துக்களை இழந்து அல்லலுற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோமாக!
நண்பர்களே! ஆகஸ்டுப் பதினைந்தில் பாரதம் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் என்று உறுதி எடுப்போம். நம் பாரத தேசத்தின் ஒருமைப் பாட்டைக் கட்டிக் காப்போம் என்று சூளுரைப்போம்.
வாழ்க, சுதந்திர பாரதம்! வளர்க தமிழகம்!
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...