அனைத்து சாதி அர்ச்சகர் என்ற திட்டம் தொல்அர்ச்சககுடிகளை அழிக்கும் திட்டம் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.
தமிழகத்தை பொருத்தவரை அனைத்து சாதியிலும் அர்ச்சகர்கள் பல காலமாக அவரவர் சார்ந்த கோயில்களில் இருந்தே வருகிறார்கள்.
அதேநேரத்தில் தமிழக பெரும்பான்மை ஆகம கோயில்களில் பல நூறாண்டுகளாக, சிவாச்சாரியார், பட்டாச்சாரியர் என்ற இரு மரபுகளே பூஜை செய்து வருகிறார்கள்.
இவர்களே பிரதான அர்ச்சககுடிகள். ஒரு சிறுபான்மை மரபு. பாரம்பர்யம் மிக்க தொல்குடிகள்.
நாட்டுப்பசுவை போன்று இவர்களை பாதுகாக்கவேண்டியது இந்த சமூக கடமை.
பாரதத்தின் உச்சியில் உள்ள காஷ்மீர் பண்டிட்டுகளை போல்... பாரதத்தின் பாதத்தில் உள்ள தமிழகத்தில் உள்ள இந்த அர்ச்சககுடிகளுக்கு நடந்த அடையாள அழிப்பை, அராஜகத்தை சொல்லி மாளாது.
இத்தகைய அரசியலால் வைணவ அர்ச்சககுடிகள் பலரும் இடம் மாறிவிட்டனர். பெரும்பாலானவர் கோயிலை விட்டு வெளியேறி தங்கள் வாழ்வியலை மாற்றி அமைத்துக்கொண்டு விட்டனர்.
மீதி இருப்பது சிவாச்சாரியார் அர்ச்சககுடிகளே கிராமங்களிலும் ஆகம கோயில்களிலும் இன்றுவரை தொண்டு செய்து வருகின்றனர்.
கடந்த 100 ஆண்டு பிராமண வெறுப்பு அரசியல் இந்த சிவாச்சாரியார் அர்ச்சககுடிகளை படி படியாக அடையாள அழிப்பை, உரிமை அழிப்பை செய்துவருகிறது.
ஊருக்கு ஒரு குடி குடும்பமாக உள்ள இந்த அர்ச்சககுடிகளும், தங்கள் சக்திக்கு மீறி இந்த திராவிட மிஷனரி அரசியலை எதிர்த்தே வருகிறார்கள்.
ஆனால் எவ்வளவு காலம் எதிர்த்துக்கொண்டே இருப்பது........
உண்மையில் தமிழகத்தில் குரலற்றவர்களாய் உள்ள ஒரே சமூகம் சிவாச்சாரியார் சமூகமே. குரலற்றவர்களின் குரலாய் நாங்கள் பேசுவோம் என்ற எந்த மீடியாவும், கட்சியும், அமைப்பும், சாதி சங்கங்களும், மடங்களும், ஆன்மீக அமைப்புகளும், சைவ அமைப்புகளும் ஒரு சிறு முனகல் அளவுகூட அர்ச்சககுடிகளின் உரிமைகளை அவர்கள் நிலையை, வலிவருத்தங்களை இந்நிமிடம் வரை பேசவில்லை என்பதே துரதிருஷ்ட உண்மை.
இங்கே பொது சமூகத்தில், உள்ள பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் என்று பலரும்
இந்த அனைத்துசாதிஅர்ச்சகர் என்ற நிலை வந்துவிட்டால், பிராமணர்களை ஒடுக்கிவிட்டோம் என்ற மாயை மனோநிலையில் உள்ளார்கள்.
அனைத்து சாதி அர்ச்சகர் நிலையால் ஒரு துரும்பு அளவுக்குக்கூட, வைதிக பிராமணர்களோ, வேத பிராமணர்களோ, கன்னட, தெலுங்கு பிராமணர்களோ ,கணக்குபிள்ளை பிராமணர்களுக்கோ ஒரு பாதிப்பும் கிடையாது .
மற்ற பிராமணர்களுக்கு சிவாச்சாரியார் களுக்கு எதிரான ஒரு நிலை வந்துவிட்டதே என்ற வருத்தம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் பிராமணர்களுக்கு ஒரு இழப்பும் இதனால் இல்லை.
காரணம் இவர்கள் எவரும் ஆகமகோயில் பூஜையோ, சிவாலய பூஜையோ செய்யவில்லை.
திராவிடவாதிகள் பிராமண எதிர்ப்பு என்ற வகையில் பாரம்பர்ய அர்ச்சகதொல்குடிகளை அழித்ததே இவர்கள் கண்ட பலன்.
எந்த அர்ச்சககுடிகளை ஒடுக்குகின்றார்கள் என்றால்,
கோயில் வழிபாட்டுக்கென்றே சிவபெருமான் சிருஷ்டித்த, ஆகமப்படி உருவாக்கப்பட்ட குடியாகிய #ஆதிசைவஅந்தணர்களுக்கு எதிராகவே இந்த ஒடுக்குதல் நடைபெறுகிறது.
பல நூறாண்டுகளாக #கோயில் வழிபாட்டிற்க்கென்றே உள்ள #குடியாகிய #சமூகமாகிய, ஆதிசைவ அந்தணர்களுக்கு எதிராகவே இந்த அனைத்துசாதி அர்ச்சகர் சட்டம் திராவிட வாதிகளால் வலியுறுத்தப்படுகின்றது.
இன்றைக்கு பல கிராமங்களில் கடந்த 100 ஆண்டு அரசியலால் #கோயில்வழிபாட்டுகுடிகளாகிய ஆதிசைவ குருக்கள்கள்
#திராவிடஅரசியல் கொடுமை தாங்காமல் வெளியேறிவிட்டார்கள் .
கிராம சிவாலயங்களில் சட்டம் போடாமலேயே அனைத்து சாதி அர்ச்சகர் நடைமுறைக்கு வந்துவிட்டது .
ஆக , இருக்கும் பெரும் ஆகமக் கோயிலுக்கே காலாவதியான திராவிட கூக்குரலான அனைத்துசாதி அர்ச்சகர் போட்டி.அங்குள்ள ஆதிசைவ அர்ச்சககுடிகளையும் ஒடுக்குவதே இனி வரும்கால திட்டம்.
இப்படியான நிலையால் அர்ச்சககுடிகள் In செக்யூர் நிலைக்கு தள்ளப்பட்டதோடு, தங்கள் வாரிசுகளை ஆகம கல்வி பயில வரும்காலத்தில் அனுப்புவார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது. அதோடு அர்ச்சகுடி குடும்பங்களே ஒரு அச்சத்தில் உள்ளனர்.
இன்றைய நிலையில் ஆகம கல்வி பயின்ற சிவாச்சாரியார் இளைஞர்கள் சுமார் 5000 பேராவது உள்ளார்கள். அவர்களின் மனோநிலை எதிர்காலம் கேள்விக்குறியே.
கல்வி படிப்பும் இவர்கள் படிக்கவில்லை என்பதால் தனியார் கோயில், வெளிநாடு கோயில் என சுயத்தை இழக்கவேண்டியதுதான்... நடோடிகளாய் சுற்றவேண்டியதுதான்...
வரும்காலத்தில் நீதிமன்றம் என்ன இந்த விசயத்தில் முடிவெடுக்கு என தெரியவில்லை?..... பார்ப்போம்.
தமிழக தொலைக்காட்சி, பத்திரிக்கையாளர்களுக்கு ,அரசியல்வாதிகளுக்கு தமிழகத்தில் #ஆதிசைவர் என்று ஒரு சமூக குடி பற்றி தெரியுமா புரிதல் உண்டா என்பது சந்தேகமே.?
இப்படியே சென்றால் கோயில் சார்ந்த ஆதிசைவர் என்ற குடி தமிழகத்தில் இருந்தது என்பதை #பெரியபுராணத்திலும், அரதப்பழசான #சைவப்புராணம் புத்தகத்தில் மட்டுமே காணமுடியும்.
என்னைபொறுத்தவரை எனது #தனிப்பட்ட கருத்தாக, அர்ச்சகுடிகளுக்கு சிவாச்சாரியார்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என பல காலமாக எழுதிவருகிறேன்.
காரணம் ஒருவர் விவசாய நில உரிமையை மாற்ற முற்படும்பொழுது எடுக்கும்பொழுது எவ்வாறு நிவாரணம், வேலைவாய்ப்பு தருகிறீர்களோ அதுபோல்,
கோயில் தொண்டையே பல நூறாண்டுகள் வாழ்வியலாக கொண்ட சிவாச்சாரிய அர்ச்சககுடிகளின் கோயில் உரிமையை பறிக்க முற்படும் பொழுது,
அதற்க்கு பதில் நிவாரணமாக ஒரு 50 ஆண்டுகளாவது கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் இட ஒதுக்கீடும்.. அரசு சலுகைகள் நிவாரணம், சட்டபாதுகாப்பு ஆகியவற்றை தனித்துவமாவது வழங்க அரசு முன்வரவேண்டும்.
தமிழக அரசியல்வாதிகள், அமைப்புகள், பத்திரிக்கைகள் அர்ச்சககுடிகளுக்கு கோயில் உரிமை பற்றி ஆதரித்துபேசினால் #பிற்ப்போக்குதனம் ஓட்டிக்கொள்ளும் என்ற உங்கள் பயம் புரிகின்றது.எந்த கண்டனத்தையும் வெளிப்படுத்தாதையும் உணரமுடிகின்றது.
ஆனால் பல நூறாண்டு அர்ச்சககுடி உரிமையில் தலையிடும்பொழுது, அவர்களுக்கு அதற்க்கு சமமான சரியான நிவாரணம் ,சலுகைகள் கல்வி வேலைவாய்ப்பு இடஒதுக்கீடுகள் வழங்கவேண்டும் என்று குரல் கொடுப்பதால் எந்த பாதகமும் உங்களுக்கு வந்துவிடாது.
அர்ச்சககுடிகளும் இந்த தமிழக வாசிகள்தானே. அவர்கள் மீது கவனம் செலுத்தவேண்டியதும் அரசின் கடமைதானே. இதை எடுத்துக்கூறுங்கள்.
வாய் உள்ளோர் எடுத்து பேசுங்கள். குரலற்றவர்களின் குரலாய் பேசுவதற்க்கு முயலுங்கள்.
No comments:
Post a Comment