Monday, August 16, 2021

கர்மா...!

 எதிர்பார்த்தை விட வேகமாக #காபூலை கைபற்றி ஆப்கனை தங்கள் முழு கட்டுபாட்டில் கொண்டுவந்துவிட்டது #தாலிபன் இயக்கம்...!

வெளிநாட்டு உதவி இல்லாமை தாலிபன்களின் முன் தாக்குபிடிக்க முடியா நிதி நிலை என பல விவகாரங்களால் அரசு அதிகாரத்தை தாலிபன்களிடம் ஒப்படைத்து விட்டது
உலக நாடுகளிடம் மிகபெரிய அமைதி நிலவுகின்றது, இந்த அமைதி மிகபெரிய புயலுக்கு முன்னரான அமைதியா இல்லை பின்னரான அமைதியா என்பது தெரியவில்லை
ஆப்கன் எனும் எண்ணெய் வளமோ இதர வளமோ இல்லா நாட்டில் ஆண்டுகணக்கில் பல டிரில்லியன் டாலர்களை கொட்டி காவலிருக்கும் அவசியம் அமெரிக்காவுக்கு இல்லைதான் அதே நேரம் அங்கிருந்து அமெரிக்க பாதுகாப்புக்கு சவால் வர கூடாது எனும் ரகசிய ஒப்பந்ததோடு வெளியேறிவிட்டார்கள்
மிக நவீன ஆயுதங்களையும் இன்னபிற ஆயுதங்களையும் தாலிபன்களிடம் விட்டுவிட்டு வெளியேற அமெரிக்கா ஒன்றும் பைத்தியகார நாடு இல்லை. அவர்களிடமும் ஏதோ கணக்கு இருக்கலாம்
அதே கணக்கு சீனா மற்றும் ரஷ்யாவிடமும் இருக்கலாம்
மொத்தத்தில் ஆப்கனின் தாலிபன்கள் ஒரு குட்டிசாத்தான், அந்த குட்டிசாத்தானை யார் கட்டுபடுத்தி யார் மேல் ஏவுகின்றார்கள் என்பது கண்ணுக்கு தெரியா விஷயம்
இனி காட்சிகள் மாறும்
ஆப்கன் நிலை அதள பாதாளத்துக்கு செல்லும், ஆப்கன் பெண்களின் நிலை மிக பரிதாபமாகும். அதே நேரம் அல் கய்தாவின் இரண்டாம் தலைவர் ஜவஹரி போன்றோர் இன்னும் இருக்கும் நிலையில் ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆப்கனில் ஆதரவு உண்டு எனும் நிலையில் மிக பெரிய தாக்குதல்கள் உலகெல்லாம் நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லை
இந்தியாவின் காஷ்மீரின் அமைதிக்கு தாலிபன்களின் முக்கால கூட்டாளி பாகிஸ்தானின் ஆசியுடன் அவர்களால் சவால் கொடுக்க முடியும்
எல்லா நாடுகளுமே ஓருவித அரசியல் கணக்குடன் ஆப்கனை நோக்கி கொண்டிருக்கின்றன.
தாலிபன்களின் ஆட்சி நிச்சயம் நெடுங்காலம் நீடிக்க வாய்ப்பில்லை உலகம் அவர்களை அங்கீகரிக்க போவதில்லை எந்த நாட்டு தூதரகமும் அங்கு இயங்க போவதில்லை ஐ.நா போன்ற அமைப்புகளின் வாசலுக்கு கூட யாரும் அவர்களை விட போவதில்லை
இதனால் ஆப்கன் மக்கள் மாபெரும் சிக்கலை சந்திப்பார்கள் என்றாலும் அதை பற்றி கவலையுறுவார் யாருமில்லை
தாலிபன்களின் மிக கொடிய காட்டுமிராண்டிதனத்தையும் இன்னும் பல அடாத செயல்களையும் மானிட குலத்துக்கே அவமானம் தேடிதரும் சில நடவடிக்கைகளையும் காணும் பொழுது மனம் வரலாற்று காலத்துக்கு தாவுகின்றது
இந்த நாகரீக காலத்திலே இப்படி இருக்கும் அந்த கூட்டம் கஜினி, கோரி காலத்தில் எப்படி இருந்திருக்கும்?
இன்றே இவ்வளவு அழிச்சாட்டியம் செய்யும் கும்பல் அவர்களை தட்டி கேட்க யாருமில்லா காலத்தில் எவ்வளவு ஆட்டம் ஆடியிருக்கும்?
அவர்களின் இந்திய படையெடுப்பு மதுரை வரையிலான படையெடுப்பு எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும்?
இன்று சொந்த நாட்டு மக்களையே குறிப்பாக பெண்களையே படாத பாடு படுத்தும் அக்கோஷ்டி அன்று பாரத பெண்களை என்னபாடு படுத்தியிருக்கும்?
பாமியன் புத்த சிலைகளை வெறும் கற்சிலைகளையே தகர்க்கும் கோஷ்டிகள் இந்திய இந்து ஆலயங்களை எப்படி எல்லாம் சூறையாடியிருக்கும்
தாலிபன்கள் ஆடும் ஆட்டத்தில் மெல்ல சிரிக்கின்றார்கள் கஜினியும், கோரியும், தைமூரும்.
ஆம், இன்று ஆப்கன் படும் கொடிய சித்திரவதையினைத்தான் அன்று இந்தியா சுமார் 500 வருட காலம் அனுபவித்தது. ஒவ்வொரு இந்தியனும் ஆப்கனின் இன்றைய காட்சிகளில் இருந்து வரலாற்றை புரட்டி பாடம் கற்றுகொள்ள வேண்டும்...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...