Monday, August 16, 2021

தேர் இழுக்கும் பொழுது முக ஸ்டாலின் படம் இடம்பெறும் எனும் அளவு அமைச்சர் பேசுவார்.

 இந்து அறநிலையதுறையின் அமைச்சர் சேகர்பாபு ஒருசில விஷயங்களை மறக்கின்றாரா இல்லை அரசியல் எனும் பெயரில் வம்புசெய்கின்றாரா என்பது தெரியவில்லை

இந்து ஆலயங்களின் நிர்வாகம் மட்டும் அரசுக்கு கொடுக்கபட்டிருக்கின்றதே தவிர இந்து ஆகமவிதிகளிலும் வழிபாட்டிலும் குறுக்கிடும் உரிமை அவருக்கும் இல்லை அரசும் இல்லை
தமிழ் வழிபாட்டு மொழி ஆக வேண்டும் என அரசு கருதினால் அதை எல்லா தலங்களிலும் செய்ய வேண்டும்
அரேபிய உருது மொழிகள் புழங்கும் வழிபாட்டு தலம் முதல் "அல்லேலூயா"."ஓசன்னா" என ஹீப்ரு புழங்கும் தேவாலங்கள் வரை செய்ய வேண்டும்
கோவில் அர்ச்சனை மந்திரத்தில் தமிழ் வேண்டும் அது புரியவில்லை என குதர்க்கம் பேசினால் கத்தோலிக்க ஆலயங்களில் அப்பம் பிய்க்கும் முன் குரு பேசும் ரகசிய வார்த்தைகளெல்லாம் தமிழில் பகிரங்கமாக வேண்டும்
செய்வாரா அமைச்சர்? செய்ய முடியுமா?
இந்து வழிபாடுகள் சொல்வதென்ன? வேதங்கள் சொல்வதென்ன?
அர்ச்சனை என்பதற்கு சில வழிமுறைகள் ஆகமவிதிகள் உண்டு, அந்த நல்ல அதிர்வுகளை கொடுக்கும் மந்திரங்களை வேதமுறைபடி செய்தல் வேண்டும், இது இந்துக்களின் உரிமை அதில் தலையிட எந்த கொம்பனுக்கும் அதிகாரமில்லை
காலம் காலமாக வரும் அவர்களின் பாரம்பரியங்களில் எப்படி அரசு தலையிட முடியும் என்பதுதான் தெரியவில்லை
இஸ்லாமிய வழிபாடுகள் அரேபிய மொழியிலும், கிறிஸ்தவ வழிபாடு பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஆங்கில பாணியிலுமே இருக்கின்றதே ஏன்?
உலக்ல்லாம் இஸ்லாமியன் எங்கு சென்றாலும் மொழி சிக்கலின்றி தொழ வேண்டும் என்பதற்காக, கிறிஸ்தவ வழிபாடு முதல் குருத்துவாரா வரை அப்படியே
அதேதான் தமிழகம் தாண்டி பாரதம் முழுக்கவும் பாரதம் தாண்டியும் இந்துக்கள் வழிபாடு செய்யும் மொழியாக சமஸ்கிருதம் உண்டு, இது எப்படி தவறாகும்
இந்துக்களின் வழிபாடு சமஸ்கிருத மந்திரத்தில்தான் உண்டு, இதை சைவ சமயத்து சமய குரவர் முதல் வைணவ ஆழ்வார்கள் வரை ஏற்றுகொண்டிருக்கின்றார்கள்
அதே நேரம் வழிபாட்டு பாடல்கள் என தேவாரம், திருவாசகம், நாலாயிர பிரபந்தம் என நூல்களை தந்திருக்கின்றார்கள்
அர்ச்சனை மந்திரம் வேறு, வழிபாட்டு பாடல்கள்வேறு என்பதில் இந்து சமூகம் எக்காலமும் சரியாக இருந்திருக்கின்றது
சரி, இவ்வளவு பேசும் அமைச்சருக்கு ஒரு கேள்வி, இந்த தேவாரம், திருவாசகம் பாடினால் மட்டும் தமிழனுக்கு புரியுமா?
திருமூலர் பாடல் முதல் எல்லா வழிபாட்டு பாடல்களும் தமிழனுக்கு புரியுமா? கம்பனின் பாடல்களும் வில்லிபுத்தூரார் பாடலும் ஆண்டாள் பாடலும் தமிழனுக்கு புரியுமா?
அந்த அளவில்தான் இவர்களின் குபீர் தமிழ்புரட்சி உள்ளது
சமஸ்கிருத மந்திரங்களை புறக்கணிப்போம் என்பது இந்து ஆலய சம்பிரதாயங்களை பாரம்பரியங்களை மீறுவது மட்டுமல்ல, அவனை பாரத கண்டத்துடனான இந்துக்களிடமிருந்து பிரிக்கும் கடும் முயற்சியாகும்
இதற்கு இந்துக்கள் துணை செல்லமாட்டார்கள் என்பது வேறுவிஷயம்
ஆம், இங்கு சாதி இல்லை எனும் திராவிட கட்சிகள் சாதி தலைவனுடன் கூட்டணி வைப்பார்கள், ஊழல் ஒழிப்போம் என்பவர்கள் ஊழல் புகாரில் சிக்குவார்கள் ஊழல் பெருச்சாளிகளுடன் கும்மியடிப்பார்கள்
மது ஒழிப்போம் என்பார்கள் ஆனால் அவர்களே மதுவிற்பார்கள்
அப்படி தமிழ் வழிபாடு, அர்ச்சகர் என்பார்கள் அத்தோடு விடுவார்கள், இந்து மக்கள் இவர்களை ஒரு பொருட்டாக கருதாதது போல் வழிபாட்டில் தங்கள் சம்பிரதாயங்களை பின்பற்றத்தான் செய்வார்கள், அதை எந்த திராவிட கொம்பனும் தடுக்க முடியாது
ஆனாலும் அமைச்சரின் சில பேச்சுக்கள் கவலை தருகின்றது
பெண்களும் அர்ச்சகர் இன்னும் என்னவெல்லாமோ சொல்லும் அமைச்சர் இதை மற்ற மதத்துக்கு சொல்ல தயாரா? பெண் பாதிரிகள் வேண்டும் என கத்தோலிக்க பீடத்துக்கு உத்தரவிட தயாரா?
செய்யமாட்டார்
இது சரியல்ல, இந்துக்களின் ஆகமவிதிகளில் குறுக்கிடும் அதிகாரம் அமைச்சருக்கு இல்லை
இன்னும் இப்படியே விட்டால் சாம்பிராணி போடுதல் சூழல் கேடு, விளக்கேற்றுதல் சுவரை கரிபிடிக்க வைக்கும் என என்னவென்ன அறிவிப்பெல்லாமோ வரும்
அப்படியே கோவிலில் முட்டை உடைக்கலாம் அது பக்தர் உரிமை என்பதில் இருந்து கருவாட்டு குழம்பு படையல்வரை படைக்கலாம் என உத்தரவு இடுவார்கள்
இதனால் சொல்கின்றோம், இது இந்துக்கள் கொஞ்சம் விழிப்பாக இப்பொழுதே நீதிமன்றம் முதல் வட இந்திய இந்துக்கள் ஆதரவுவரை தேட வேண்டிய இடம்
நீதிமன்றங்கள் எப்பொழுதும் இந்துக்களுக்கு ஆதரவான தீர்ப்பே தந்துள்ளன கருணாநிதி முதல் பிணராய் விஜயன் வரை மன்றங்களிடம் அடிவாங்கித்தான் வந்தார்கள்
அமைச்சர் சேகர்பாபு சென்னையின் பெரும்புள்ளியாக இருக்கலாம், ஸ்டாலினின் வலது கை அல்லது ஏதோ ஒரு கையாக இருக்கலாம்
ஆனால் அதை இந்துகோவில்களில் காட்டவேண்டிய அவசியமில்லை, காட்டினால் மேற்கொண்டு நடப்பது அவரின் கர்மாவாக இருக்கட்டும்
அழுத்தமாக சொல்கின்றோம், இந்து ஆலயங்களின் நிர்வாகம் அவரிடம் சிக்கி கொண்டதே தவிர இந்து ஆகமவிதிகளில் தலையிடும் உரிமை அவருக்கு இல்லை
அதை இந்துக்கள் உணர்த்தினால் நல்லது, இல்லையேல் கோவிலில் மூலவர் பக்கம் ராம்சாமிக்கு சிலையும், உற்சவர் பக்கம் கருணாநிதிக்கு சிலையும் அதன் முன் இறால் படையலும் வைக்கபடும், தேர் இழுக்கும் பொழுது முக ஸ்டாலின் படம் இடம்பெறும் எனும் அளவு அமைச்சர் பேசுவார்
இந்துக்கள் அமைதியாக நீதிமன்றம் மூலம் இதர இந்து அமைப்புகள் மூலம் தங்கள் மத உரிமையினை காத்து கொள்வது நல்லது, அதனை செய்வார்கள் என எதிர்பார்ப்போம்
கொரானா காலத்தில் ஆலயங்கள் மூடி கிடக்கின்றன, முன்பு வழிபாடுகள் நடந்தபொழுதும் வழிபாடு பற்றி அர்ச்சகர் பற்றி எந்த இந்துவும் இவரிடமோ இல்லை வேறேங்கோ புகார் சொன்னதுமில்லை
அப்படி இருந்தும் வீண் சிக்கலுக்கும், வெட்டி அரசியலுக்கும், வறட்டு குழப்பங்களுக்கும் வழிகோலுகின்றார் அமைச்சர்
இது தமிழகத்தில் இந்து ஆலய உரிமைகளுக்கு விடபடும் மிரட்டல் , ஒரு மததுவேஷம் என கருதவேண்டிய வகை என்பதால் சட்டம் ஒழுங்கு போல மத துவேஷம் எனும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய விவகாரமும் கூட.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...