Friday, August 13, 2021

ராமன் #ஆண்டாலும் #ராவணன் #ஆண்டாலும் #நம்மபோலீஸ் #மாறவே #மாறாதோ?

 இது குறை கூறும் பதிவல்ல வருத்தப்பதிவு.

நண்பர்களே
இன்று ஆடிவெள்ளிக்கிழமை
காலை திருவரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டு
திருச்சிக்கு
வந்து டிபன் சாப்பிட இப்றாஹீம் பார்க் அருகில் உள்ள புகழ்பெற்ற ஹோட்டலுக்கு சென்றேன்...
எனக்கு முன் உள்ள மேசையில் போலீஸ் உடையோடு இரண்டு காவலர்கள் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்...
முதல்நாள்
இரவில் பட்டினி கிடந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்...
நிறைய்ய சாப்பிடுவதற்கு புண்ணியம் செய்திருக்கவேண்டும்...
நான் வீட்டில் நிறைய்ய சாப்பிட்டால்
என் சகோதரிகள் அது என்னடா வயிறா வண்ணான் சாலா? என்று கேலி செய்திருக்கிறார்கள்...
அதற்குப்பயந்தே அளந்து சாப்பிட்டு குடல் சுருங்கிப்போய் இப்போதெல்லாம் குழந்தை சாப்பிடும் அளவுதான் சாப்பிடுகிறேன்...
முடியவில்லை
செல்ல மறுக்கிறது உணவு...
சரி விஷயத்திற்கு வருவோம்.
இரண்டு போலீஸும் சாப்பிட்டு முடித்ததும் சர்வர் பில் கொண்டுவந்து கொடுத்தார்...
முகம் சிவந்து போனார்கள் இரண்டு போலீசாரும்.
"யார் பில் போடச்சொன்னா?"
"இல்லீங்க சார் கேஷியர்ட்ட கேட்டேன்
அமவுன்ட் எவ்வளவு?னு கேட்டார்...
சொன்னேன்
முதலாளி திட்டுவார்
பில் போட்டுருங்கனு சொல்லிட்டார்" என்றார்.
பிடிக்காத எதிரியை பார்ப்பதுபோல பார்த்து முறைத்து வெடுக்கென்று பில்லை பிடிங்கிக் கொண்டு போனார்
அதில் ஒருவர்
அவர் சட்டையில் இரண்டு வெள்ளைப்பட்டை இருந்ததால் அவர் ஏட்டைய்யாவாக இருப்பார் என்று நினைக்கிறேன்...
பின்னால் வந்த காவலர் சொன்னார் "ஏட்டையா குடுங்க நான் பணம் கொடுத்திடுறேன்
இந்த நாய்ங்க கிட்ட எப்படி வசூல்பண்ணனும்னு எனக்குத் தெரியும்" என்று
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களில் இருந்து ஒன்றை உருவி எடுத்து
கொடுத்தார்
கரெக்டாக மிச்சம்
ரூபாயை எண்ணி வாங்கிக்கொண்டு வன்மத்தோடு வாசல் கடந்தார்...
நான் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு கைகழுவி
விட்டுவந்து காப்பிக்கு காத்திருந்தேன்....
செம டிவிஸ்ட்
கல்லா அருகில் ஒரே சவுண்ட்....
கேஷ் கவுண்டரில்
சாப்பிட்டுவிட்டுச் சென்ற இரண்டு போலீசாரும் கூடவே ஒரு எஸ் ஐ யை கூட்டிக்கொண்டு வந்து பயங்கர சவுண்ட்...
முதலாளிக்கு
போன் செய்து வரவழைக்கப்பட்டார்...
"உங்க கடைல ஆறு பேர் மாஸ்க் போடாம வேலை பார்க்கிறாங்க....
ஐயாயிரம் ரூபாய் பைன் கட்டுங்க!"என்றார் எஸ் ஐ.
ஓனர் "எங்க ஸ்டாப்ஸ் எல்லாரும் போட்ருக்காங்க
யாராவது ஒரு ஆள காட்டுங்க சாப்டவந்த கஸ்டமர எடுத்துருப்பீங்க"
என்றார்
"நான் வீடியோ எடுத்திருக்கேன்யா... பார்க்கிறயா?
ஒரு அதிகாரிகிட்ட எப்டி நடந்துகனும்ங்கற அறிவில்ல உனக்கு...
ஐயாயிரம் பைன கட்டு அப்பதான் புத்திவரும்" என்று பேச
மரியாதைக்குறைவாக
ஏக வசனத்தில் அவர் பேசுவார் என எதிர்பார்க்காத ஓனர்
முகம் சிவந்து போனது....
"சார் ஒரு நாளைக்கு
ஐம்பது பேருக்கு மேல வந்து சாப்ட்டு போறாங்க போலீஸ்ல...நீங்க சிசி டிவி
பார்க்குறீங்களா?
அதுக்கே நாங்க போட்ற முதல்ல ஒரு பெரிய தொகய கொடுக்கறோம்!
என்று ஆற்றாமையோடு சொல்ல
"நான் சாப்டுருக்கேனா? என்ன பார்த்திருக்கியா
நான் வந்து ஏழு மாசமாச்சு வந்துருக்கேனா? என்று கேட்டு மாஸ்க்கை அவிழ்க்க போன எஸ் ஐயை ஏட்டைய்யா தடுக்கிறார்...
ஆத்திரம் அடங்காத
எஸ் ஐ கடை முதலாளியைபார்த்தது
"நீ பேசுற பேச்சுக்கு இப்பவே இன்ஸ்பெக்டர்ட்ட போன்பண்ணுனா ஜீப்ல ஏத்திட்டுவா மண்டகப்படி வெச்சுருவோம் பாரு."..
எனச்சொல்ல பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கே பகீர் என்றது.
கூட்டம் சேருவதையும் ஆளாளுக்கு வீடியோ எடுப்பதையும்பார்த்து பயந்து போன ஏட்டைய்யா ஜாடைகாட்ட கொஞ்சம் குரலை கூலாக்கிக் கொண்டு
"நாமெல்லாம்
ஒரே ஏரியால
தொழில் செய்றோம் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சு நடந்துக்கனும்
சரி சரி ரசீது போட்டாச்சு
உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்
ஐநூறு ரூபாய் னு திருத்திருய்யா....
பணம் வாங்கிட்டு ரசீது கொடுத்துட்டு வா!" என்று
காவலரிடம் ஜாடை காட்டிவிட்டு விடுவிடு என்று நடையை கட்டினார்...
இந்தப் போலீஸ் ஏன் இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை
கொரோனா கொடுமையில் ஹோட்டல்தான் என்றல்ல எந்தத்தொழில் செய்பவரும் நிம்மதியாக இல்லை...
எல்லோரும் பழைய நிலைக்கு வர எப்படி வைத்தாலும் குறைந்தது பத்தாண்டுகாலம் ஆகும்.
மூன்றாண்டுகளாக எந்த வருமானமும் இல்லாமல் வாழும் வியாபாரிகளிடம்
ஒரு சிங்கிள் பைசா கூட குறையாமல் முள்ளங்கிப் பத்தை கணக்காய் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் சம்பளம், கிம்பளம், போனஸ்,
அது இல்லாமல்
ஆக்டோபஸி போல நினைத்த இடத்திலெல்லாம் கைநீட்டி கரண்ஸி காணும் இவர்கள்
கொஞ்சம் கருணையோடு நடந்துகொள்ளவே மாட்டார்களா? அதிகாரிகள்
கவுன்ஸிலிங் கொடுக்கவேண்டும்!
சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்டால் "ஜீப்பில் ஏற்றிச்சென்று மண்டகப்படி நடத்துவோம்" என்று மக்கள் நிறைய்யபேர் பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் சொல்கிறார் என்றால்...
சாமானியர்களின் கதி இன்னமும் சாத்தான்குளம் கதிதானா?
ஆட்சி மாறியும் போலீஸார் மாறாதிருந்தால் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் என்ன நல்லாட்சி நடத்தியும் பயனில்லாமல் போகும்.
கிட்டத்தட்ட ஆறுபேருக்கு மேல் இவர்களின் தகறாரை வீடியோ எடுத்தனர்...
எந்தச் சேனலில் எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்...
எம்எல்ஏவுக்கு போன் போட்டு சொன்னேன் மிகுந்த வருத்தப்பட்டு மேலதிகாரிகளிடம் பேசுவதாக சொன்னார்
சேனலில் வந்தால் சட்டசபையில்
இது பற்றி பேசினாலும் பேசுவார்கள்..
இப்போது எங்களுக்கு கிடைத்திருக்கும் போலீஸ் கமிஷனர் பற்றி பாஸிட்டிவாகத்தான் எல்லோரும் சொல்கிறார்கள்...
நல்ல அதிகாரிகளின் பெயரை நாறடிக்க நாலைந்துபேர் போதும்....
இப்போது தலைப்பிற்கு
வாருங்கள்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போலீஸை
திருத்தவே முடியாதோ?
நாம் சுதந்திரதின பவளவிழா கொண்டாடுகிறோம்...
யாருக்கு சுதந்திரம்
போலீசுக்கு மட்டுமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...