வேளாளர் இனத்தில் பெரும் வரலாற்று பெருமை கொண்ட பழம்பெரும் ஜாதியான கார்காத்த வேளாளர் என்ற அரச பரம்பரை யின் வரலாற்று சுவடுகள் உங்கள் பார்வைக்கு.
மண்டல சதகம் என்ற பாடல் நூறு பாடல் களை கொண்டது. ஒரு பேரரசின் நிலப்பரப்புகளை மண்டலம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.
அந்த வகையில், வேளாளர் உட்பிரிவுகளில் இன்னும் சில உட்பிரிவுகளுக்கு மண்டல சதக பாடல்கள் உள்ளது ஆனாலும் கார் மண்டல சதகேமே முதன்மையானது.
கார்மண்டல சதகம்:
12 ஆம் நூற்றாண்டு காலத்தில் அவிநாசி ஆறைகிழார் எனும் கொங்கு வேளாளர் பெருமகனால் இந்த கார்கார்த்த வேளாளர் இன் ஆட்சி முறை, பற்றியும் ,கார்மண்டல சதகத்தின் எல்லைகள் பற்றியும் விவரித்து 100 பாடல்களாக இயற்றி உள்ளார்.
இன்றைக்கு சில உட்பிரிவு வேளாளர்கள் கார்காத்த வேளாளர்களை துட்சமாகவும் நினைத்து கொண்டு பேசி வருகிறார்கள் ஆனால் உண்மை என்றும் மறையாது.
நாங்கள் யார் எங்கள் பெருமை என்ன என்பதை 1000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கொங்கு திருமகன் எழுதி உள்ளார் என்றால் அவருக்கு முன்னாடி எத்தனை நூற்றாண்டு வரலாறுகளை கொண்டு பாடல் இயற்றி இருப்பார் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த மாதம் தமிழகத்தை தனி தனி மாநிலமாக பிரிக்க பேசி கொண்டு இருந்தார்கள். எல்லாரும் எது ஏதோ நாடு மண்டலம் என்று சொன்னார்கள். வரலாற்றில் குறிப்பாக இன்றைய தமிழ்நாட்டின் எல்லைக்களை எடுத்து கொண்டால் கூட அதில் அதிக ஆதிக்கம் செலுத்தி ஆட்சி செய்தவர்கள் இந்த கார்காத்த வேளாளர்கள்.
இடையில் சிலர் வேறு காவேரி தண்ணியை டெல்டா வுக்கு தர மாட்டோம் என்று பேச்சு.
அந்த காவேரி ஆறு தொடங்கும் தலைகாவேரி முதல் அது கடலில் கடக்கும் கடை கோடி வரை கார்காத்த வேளாளர் களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி நான் சொல்லல 1000 வருஷ வரலாறு சொல்லுது.
காவேரி ஆற்று நீரை தேக்கி வைக்க மேட்டூரில் அணை கட்டப்பட்ட 1500 ஏக்கர் நிலம் சவுரிய பிள்ளை என்ற கார்காத்த வேளாளர் உடையது.
கார்மண்டலத்தை மறைத்து இன்று பலர் வேறு பெயர் சூட்டி தன்னுடைய மண்டலம் என்று சொல்வது வேடிக்கை ஆக உள்ளது.
கார்காத்த வேளாளர் வரலாறு ஒரு பதிவில் ஒரு நாளில் ஒரு வாரத்தில் சொல்லி முடிக்க முடியாது. பல நூறு வருட வரலாற்று பெருமை ஒவ்வொன்றாக பதிவு செய்கிறோம் காத்து இருங்கள்.
யார் மனதையும் புண்படுத்த அல்ல. கார்மண்டலம் மற்றும் அதன் பெருமையை உலகம் அறிய செய்யவே.
கார்காத்த வேளாளர் ஆக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.
இவண் : தமிழக கார்காத்த வேளாளர் சங்கம் { நடுநாடு }
கார்மண்டலம்
கார்காத்த வேளாளர் பதிவு தேதி : 13/8/2021


No comments:
Post a Comment