மாசடைந்த காற்றை சுவாசிப்பது சுதந்திரமா
நஞ்சு கலந்த உரங்களால் மண்ணுக்கு சுதந்திரமா
சாயப்பட்டறை கழிவுகளால் நீருக்கு சுதந்திரமா
நெகிழிப் போர்வையை சுமப்பது நிலத்துக்கு சுதந்திரமா
கான்கிரீட் காடானது நகரத்துக்கு சுதந்திரமா
மரங்கள் அழிவது வனத்துக்கு சுதந்திரமா
மலைவளம் அழிவது விலங்குகளுக்கு சுதந்திரமா
நீர் நிலைகள் அழிவதால் நிலத்தின் தாகம் தீருமா
தொழிற்சாலைகளின் புகை மண்டலம் வானுக்கு சுதந்திரமா
தரமற்ற தாய் மொழி கல்வியாலும்
பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாலும்
நேர்மையை மறந்த மனிதர்களாலும்
லஞ்சம் நிறைந்த அலுவலகங்களாலும்
ஜாதி, மத, இன, வேறுபாடுகளாலும்
காமக்கண் கொண்ட கயவர்களாலும்
வஞ்சியர்களை வஞ்சிக்கும் வஞ்சகர்களாலும்
வரதட்சணை, மது, அரக்கர்களாலும்
உழைக்க தயங்கும் இளைஞர்களாலும்
என்று கிடைக்கும் சுதந்திரம்........?
இளைய தலைமுறையே வெகுன்டெழுங்கள்
பாரத மாதாவின் மனம் குளிர
தாய்திருநாடு சுதந்திர காற்றை சுவாசிக்க
களைகளை நீக்கி தடைகளை தகர்த்துங்கள்
வீர நடை போட விரைந்து வாரீர்....
No comments:
Post a Comment