Monday, August 16, 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா? :ஸ்டாலினை எச்சரிக்கிறார் சாமி!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகள், முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளன.
  • சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர்; திருச்சி, சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோவில்களில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
  • இந்த சட்ட மசோதா, 1970 அக்., 2ல், அப் போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது.
  • ஆனாலும், வழக்குகள் காரணமாக நிறைவேற்ற முடியாமல் இருந்தது. 51 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேற்றி உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமையாக குறிப்பிட்டு இருக்கிறார்.
  • இந்நிலையில் இப்பிரச்னையை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கையில் எடுத்திருக்கிறார்.
சுப்பிரமணியன் சாமி பேட்டி:
  • தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் முதல்வராகி இருக்கிறார்.
  • தி.க., ஆட்களின் பிடியில் சிக்கி, தவறான செயல்பாடுகளை, அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார்.
  • சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார்.
  • ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். 'சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்' என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்.
  • திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.
  • இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர்.
  • '51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார்' என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர்.
  • இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் - 1959 இயற்றப்பட்டது.
  • அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு.
  • அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
  • சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்.
  • முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது.
  • இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது.
  • அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன்.
  • பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன்.
  • இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  • நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை.
  • அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது.
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது.
  • அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன்.
  • தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன்.
  • எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின் 'வாபஸ்' பெற வேண்டும்.
  • இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
  • அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை.
  • அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார்.
  • அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...