ருபாய்கு 3 படி அரிசியில் தொடங்கிய பித்தலாட்டம் இன்று 5.70 லட்சம் கோடி கடனில் முடிந்துள்ளது...இனியும் தொடரும் ?
‘கஜானாவும் காலி, களஞ்சியமும் காலி’
‘அள்ளி கொடுக்க முடியாது, கிள்ளி கொடுக்கிறோம்’... போன்ற அடுக்கு மொழி பேச்சில் மயங்கிய முட்டாள் தமிழனே இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பல லட்சம் கடனில் தமிழகம் தத்தளிக்கிறது என்று சொல்லிக் கொண்டே ‘கொரோனா நிவாரணம் 4000, மாதம் 1000, ரேஷனில் இலவசம் போன்ற வாக்குறுதிகளையும் அள்ளி வீசும் போது, ‘இது எப்படி சாத்தியம்’ , மேலும் கடன் ஏறாதா என்று எந்த வாக்காளராவது யோசித்து இருப்பாரா ?
கழகங்கள் தங்கள் திட்டத்தை வெகு ஜோராக நிறைவேற்றி வருகிறார்கள், அதற்கு மறத் தமிழன் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு தந்தான், விளைவு தமிழன் முட்டாள் தான்.
நம்மை நம்புவான், தேர்தல் சமையம்தில் ஒன்று, முடிந்த பிறகு வேறு என்று தாரளமாக பேசலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.
நேர்மை துளியும் இருந்திருந்தால் இப்போது கூட ‘இலவச திட்டங்களை நிறுத்துகிறோம், வளர்ச்சி திட்டங்களை அறிவிக்கிறோம்’ என்று கூறியருக்கலாமே ? கூற மாட்டார்கள்...
இரண்டு நாட்களுக்கு பிறகு ‘அப்பாவி’ தமிழன் இதை மறக்கப்போகிறான், எதற்கு கவலை என்ற எண்ணம்.
வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் மேலும் பல இலவசங்களை அள்ளி வீசினால் தமிழன் வாக்களித்து கொண்டாடத்தான் போகிறான்.
இன்னும் எத்தனை யுகங்கள் போனாலும் தமிழகம் தேறாது, தேற விடமாட்டான் மறத் தமிழன்.
வெளிப்படையாக பேசுபவனை, உண்மையை பேசுபவனை, பைத்தியக்காரன் என்றுதானே அழைக்கிறான் மறத் தமிழன்..
No comments:
Post a Comment