நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் ஆட்சியில் இல்லை என்றால் இன்றைய ஆஃப்கானிஸ்தான் நிலையில் காஷ்மீர் இருந்திருக்கும். காரணம்
1. ஆப்கனின் ஷரியாத் சட்டத்தை வரவேற்கும் அதே மனோநிலைதான் காஷ்மீரின் முஸ்லீம் ஆதிக்கக் கூட்டங்களிடமும்.
2. இன்று ஆப்கானிஸ்தான் நிலைமையை உருவாக்கியவை அமெரிக்காவும், பாக்கிஸ்தானும். காஷ்மீர் விஷயத்தில் கூடுதலாகச் சீனாவும் திரை மறைவில் இணைந்திருக்கும்.
3. ஆர்டிகிள் 370 - Aயை ரத்து செய்வதில் இருந்து காஷ்மீர் என்றாலே அதைப் பாக்கிஸ்தானுடன் விவாதிக்க வேண்டும் என்று நேருவிய இடதுசாரிக் காங்கிரஸ், திமுக உட்பட்ட அதன் கூட்டாளிகள், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மீடியா வியாபாரிகள்.
பாதுகாப்பு விஷயம் என்றால் அதைப் பாராளுமன்றத்தில் மட்டுமே விவாதிப்போம்;தேவைப் பட்டால் பல திட்டங்களை அரசு, ராணுவ வட்டாரங்களில் மட்டுமே முடிவெடுப்போம் என்னும் மோடி அரசின் வலிமையான கொள்கை நாட்டை உள்நாட்டு வெளிநாட்டுத் தீய சக்திகளின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுகிறது, பதிலடி கொடுக்கிறது.
நமது 75வது சுதந்திர தினத்தின்று உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டில் நமது சுதந்திரத்தின் நிலை, அதன் மதிப்பை நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மோடி சர்க்கார் எடுக்கும் முடிவுகளை நூறு சதவீதம் ஆதரிக்க வேண்டும். சமூக மீடியாவில் விவாதிக்கும் நம்மைவிடக் களத்தில் இறங்கி வேலை செய்யும் அரசாங்கத்திற்கு அதிக அளவில் விஷயம் தெரியும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சுப்ரமணியம் சாமி போன்றவர்கள் இதுபற்றி மோடி அரசைக் குறை கூறி டிவீட் செய்தால் ஒரு சிரிப்பு
ஸ்மைலி போடவும். அதுவே பெரிய மரியாதை. கூடுதலாக ஒரு நடை ஆப்கனுக்குப் போய் வரச் சொல்லி ஆலோசனை கூறலாம். புரிந்து கொள்வார்கள்.
No comments:
Post a Comment