அனைத்து சாதி அர்ச்சகர் என்ற திட்டம், தொல்அர்ச்சககுடிகளை அழிக்கும் திட்டம் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை, அனைத்து சாதியிலும் அர்ச்சகர்கள், பல காலமாக அவரவர் சார்ந்த கோயில்களில் இருந்தே வருகிறார்கள்.
அதேநேரத்தில், தமிழக பெரும்பான்மை ஆகம கோயில்களில் பல நூறாண்டுகளாக சிவாச்சாரியார், பட்டாச்சாரியர் என்ற இரு மரபுகளே பூஜை செய்து வருகிறார்கள்.
இவர்களே பிரதான அர்ச்சககுடிகள். ஒரு சிறுபான்மை மரபு. பாரம்பர்யம் மிக்க தொல்குடிகள்.
நாட்டுப்பசுவைப் போல, இவர்களைப் பாதுகாக்க வேண்டியது இந்த சமூகக் கடமை.
பாரதத்தின் உச்சியில் உள்ள காஷ்மீர் பண்டிட்களைப் போல்... பாரதத்தின் பாதமான தமிழகத்தில் உள்ள இந்த அர்ச்சககுடிகளுக்கு நடந்த அடையாள அழிப்பை, அராஜகத்தை சொல்லி மாளாது.
இத்தகைய அரசியலால் வைணவ அர்ச்சககுடிகள் பலரும் இடம் மாறிவிட்டனர். பெரும்பாலானவர் கோயிலை விட்டு வெளியேறி, தங்கள் வாழ்வியலை மாற்றி அமைத்துக்கொண்டு விட்டனர்.
மீதி இருப்பது சிவாச்சாரியார் அர்ச்சககுடிகளே. கிராமங்களிலும் ஆகம கோயில்களிலும் இன்றுவரை தொண்டு செய்து வருகின்றனர்.
கடந்த 100 ஆண்டு பிராமண வெறுப்பு அரசியல், இந்த சிவாச்சாரியார் அர்ச்சககுடிகளை படிப்படியாக அடையாள அழிப்பை, உரிமை அழிப்பை செய்துவருகிறது.
ஊருக்கு ஒரு குடி குடும்பமாக உள்ள இந்த அர்ச்சககுடிகளும், தங்கள் சக்திக்கு மீறி இந்த திராவிட மிஷனரி அரசியலை எதிர்த்தே வருகிறார்கள்.
ஆனால் எவ்வளவு காலம் எதிர்த்துக்கொண்டே இருப்பது........
உண்மையில் தமிழகத்தில் குரலற்றவர்களாய் உள்ள ஒரே சமூகம் சிவாச்சாரியார் சமூகமே. எந்த மீடியாவும், கட்சியும், அமைப்பும், சாதி சங்கங்களும், மடங்களும், ஆன்மீக அமைப்புகளும், சைவ அமைப்புகளும் ஒரு சிறு முனகல் அளவுகூட அர்ச்சககுடிகளின் உரிமைகளை அவர்கள் நிலையை, வலி, வருத்தங்களை இந்நிமிடம் வரை பேசவில்லை என்பதே துரதிருஷ்ட உண்மை.
இங்கே பொது சமூகத்தில், உள்ள பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் என்று பலரும் இந்த அனைத்து சாதிஅர்ச்சகர் என்ற நிலை வந்துவிட்டால், பிராமணர்களை ஒடுக்கிவிட்டோம் என்ற மாயை மனோநிலையில் உள்ளார்கள்.
அனைத்து சாதி அர்ச்சகர் நிலையால் ஒரு துரும்பு அளவுக்குக்கூட வைதிக, வேத, கன்னட, தெலுங்கு, கணக்குபிள்ளை பிராமணர்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது .
மற்ற பிராமணர்களுக்கு, சிவாச்சாரியார் களுக்கு எதிரான ஒரு நிலை வந்துவிட்டதே என்ற வருத்தம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் பிராமணர்களுக்கு ஒரு இழப்பும் இதனால் இல்லை.
காரணம் இவர்கள் எவரும் ஆகமகோயில் பூஜையோ, சிவாலய பூஜையோ செய்யவில்லை.
திராவிடவாதிகள், பிராமண எதிர்ப்பு என்ற வகையில், பாரம்பர்ய அர்ச்சக தொல்குடிகளை அழித்ததே இவர்கள் கண்ட பலன்.
எந்த அர்ச்சககுடிகளை ஒடுக்குகின்றார்கள் என்றால்,
கோயில் வழிபாட்டுக்கென்றே சிவபெருமான் சிருஷ்டித்த, ஆகமப்படி உருவாக்கப்பட்ட குடியாகிய #ஆதிசைவ அந்தணர்களுக்கு எதிராகவே இந்த ஒடுக்குதல் நடைபெறுகிறது.
பல நூறாண்டுகளாக #கோயில் வழிபாட்டிற்கென்றே உள்ள குடியாகிய, சமூகமாகிய, ஆதிசைவ #அந்தணர்களுக்கு எதிராகவே இந்த அனைத்துசாதி அர்ச்சகர் சட்டம் வலியுறுத்தப்படுகிறது.
இன்றைக்கு பல கிராமங்களில், கடந்த 100 ஆண்டு அரசியலால் #கோயில்வழிபாட்டுகுடிகளாகிய ஆதிசைவ குருக்கள்கள்
#திராவிடஅரசியல் கொடுமை தாங்காமல் வெளியேறிவிட்டார்கள் .
கிராம சிவாலயங்களில் சட்டம் போடாமலேயே அனைத்து சாதி அர்ச்சகர் நடைமுறைக்கு வந்துவிட்டது .
ஆக, இருக்கும் பெரும் ஆகமக் கோயிலுக்கே அனைத்துசாதி அர்ச்சகர் போட்டி. அங்குள்ள ஆதிசைவ அர்ச்சககுடிகளையும் ஒடுக்குவதே இனி வரும்கால திட்டம்.
இப்படியான நிலையால் அர்ச்சககுடிகள் In செக்யூர் நிலைக்கு தள்ளப்பட்டதோடு, தங்கள் வாரிசுகளை ஆகம கல்வி பயில வரும்காலத்தில் அனுப்புவார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது. அதோடு அர்ச்சகுடி குடும்பங்களே ஒரு அச்சத்தில் உள்ளனர்.
இன்றைய நிலையில் ஆகம கல்வி பயின்ற சிவாச்சாரியார் இளைஞர்கள் சுமார் 5000 பேராவது உள்ளார்கள். அவர்களின் மனோநிலை, எதிர்காலம் கேள்விக்குறியே.
கல்வி படிப்பும் இவர்கள் படிக்கவில்லை என்பதால் தனியார் கோயில், வெளிநாடு கோயில் என சுயத்தை இழக்கவேண்டியதுதான்... நடோடிகளாய் சுற்றவேண்டியதுதான்...
வரும்காலத்தில் நீதிமன்றம் என்ன இந்த விசயத்தில் முடிவெடுக்கு என தெரியவில்லை..... பார்ப்போம்.
தமிழக தொலைக்காட்சி, பத்திரிகையாளர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு தமிழகத்தில் #ஆதிசைவர் என்று ஒரு சமூக குடி பற்றி தெரியுமா? புரிதல் உண்டா? என்பது சந்தேகமே?
இப்படியே சென்றால் கோயில் சார்ந்த ஆதிசைவர் என்ற குடி தமிழகத்தில் இருந்தது என்பதை #பெரியபுராணத்திலும், #சைவபுராணம் புத்தகத்தில் மட்டுமே காண முடியும்.
சிவார்ப்பணம்.

No comments:
Post a Comment