Sunday, August 15, 2021

தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு நெருக்கமான நிதின் கட்கரி.

 பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன், தி.மு.க., - எம்.பி.,க்கள் நெருக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, நெருக்கமான, நிதின் கட்கரி

'பெகாசஸ்' உளவு விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்களால் பார்லிமென்ட் மழைக்கால கூட்டதொடர் முடங்கியது. பார்லி., கூட்டம் நடந்தாலும் சரி, ஒத்திவைக்கப்பட்டாலும் சரி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மட்டும் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.எம்.பி.,க்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை அமைக்கக் கோரி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தபடி இருப்பது வாடிக்கை.

இந்த கூட்ட தொடரின் போது அனைத்து லோக்சபா தொகுதியிலும் நெடுஞ்சாலை அமைக்க அமைச்சர் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.எனவே எம்.பி.,க்களின் 'ஹீரோ' என, நிதின் கட்கரிக்கு உறுப்பினர்கள் செல்லப் பெயரே வைத்துள்ளனராம்.மற்ற அமைச்சர்களை விட, நிதின் கட்கரியுடன், தி.மு.க., - எம்.பி.,க்கள் அதிக நெருக்கத்துடன் பழகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...