*தும்பைப்பூ சிவனுக்குரிய மலர் என்பதற்கு ஏராளமான பக்தி இலக்கியச் சான்றுகள் உள்ளன*
*கொன்றை தும்பை அணிந்த மருந்து கோதை மீது படர்ந்த மருந்து மன்றிலே நின்றாடும் மருந்து
மாணிக்க வாசகன் கண்ட மருந்து
அருமருந்தொரு தனி மருந்து
அம்பலத்தே கண்டேன்*
தும்பைப்பூவை விரும்பிச் சூடும் பரமனை ’தும்பைசூடி’ எனத் திருமுறைகள் போற்றுகின்றன.
ஒரே ஒரு தும்பைப் பூவை பக்தியுடன் பரமசிவனின் பாதத்தில் வைத்து வழிபட்டால்,
அந்த பக்தனுக்கு அவர் தங்கத் தாம்பாளத்தில் மோட்சத்தைக் கொடுப்பாராம்.
கேரளத்து சிவன் கோவில்களில் தும்பைப் பூ அர்ச்சனை மிகவும் விசேஷமாக நடைபெறும்.
மாங்கல்ய பாக்கியம் வேண்டி கோவில் சிவனுக்கு தும்பைப்பூ மாலை சாத்துவது வழக்கமாகும்.
தும்பைப் பூ சிவபெருமானுக்குரியது என்றாலும், விநாயகருக்கும் பிடித்த மலராகும். தும்பைப் பூ கொண்டு துர்க்கையை பூஜை செய்தால் தரித்திரத்தைத் துரத்தி தன தான்யம் பொழிந்திடுவாள்
நவராத்திரி தினங்களில் ஏழாம் நாள் அன்று, சரஸ்வதி தேவி அலங்காரம் செய்து அல்லது அவளது திருவுருவத்தின் எதிரில் தும்பைப் பூ கோலம் போட்டு வழிபடுவது விசேஷ பலன்களைக் கொடுக்கும்.
சங்க இலக்கியத்தில் சில இடங்களில் தும்பைப் பூ மாலை அணிந்திருந்தால் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருப்பதைக் குறிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ராவணன் போருக்குப் புறப்பட்டபோது தும்பைப் பூ மாலை போட்டுச் சென்றதாக கம்பர் யுத்தகாண்டத்தில் குறிப்பிடுகிறார்.
பாண்டவர்களும் கவுரவர்களும் போரிட்டதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலிலும் தம்பைப் பூ இடம் பெற்றுள்ளது.
தும்பை மலருக்கு எதிராளியை வசீகரிக்கும் ரகசிய குணம் இருந்ததை அகத்தியர் தனது ’அமுத கலைஞானம் 1200’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது கவிழ்த் தும்பைச் செடியை சாப நிவர்த்தி செய்து, வேரை எடுத்து பசும்பால் விட்டு அரைத்து சூரியன் முன் வைத்து தொழுது, பின்னர் திலகமாக இட்டால் கண்டவர்கள் மயங்குவர் என்கிறார் அகத்தியர்.
தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள் அளப்பரியது. இதுபற்றி பார்ப்போம்.
25 தும்பை பூக்களை, ½ டம்ளர் காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்குக் குடிக்க கொடுக்க குழந்தைகளின் தொண்டையில் கட்டிய கோழை வெளிப்படும்.
10 துளிகள் அளவு தும்பை பூச்சாற்றை, காலையில் மட்டும் குழந்தைகளுக்கு உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கான சளி, இருமல், விக்கல் தீரும்.
தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை குடிக்க வேண்டும். தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் செய்ய ஒவ்வாமை தீரும்.
தும்பைச் செடியை, இலை, பூக்களுடன் பறித்து வந்து, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.
தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 15 துளிகள் அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும்.
தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை சரியாகும். தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் நிவாரணம் கிடைக்கும்.
தீராத தலைவலி உள்ளவர்கள் தும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.
காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தில் மட்டும் உணவில் உப்பு, புளி, அசைவ உணவுகள் சேர்க்கக் கூடாது.
டைஃபாய்டு காய்ச்சல் வரும்போது கண்வலி, தலைவலி போன்ற பிரச்னைகளும் பின்தொடர்ந்து வரும். அப்போது 10 தும்பைப்பூக்களை தாய்ப்பாலில் ஊறவைத்து, அதை மெல்லிய துணியால் நனைத்து நெற்றி மற்றும் கன்னப்பொட்டில் பற்று போடவும். கூடவே கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்வலி, தலைவலி சரியாவதுடன் கண்களுக்கு ஒளி கிடைக்கும்.
தும்பைப்பூவின் சாறு 2 சொட்டு, வேலிப்பருத்தி (உத்தாமணி) சாறு 2 சொட்டு, மிளகுத்தூள் 2 சிட்டிகை, தேன் சேர்த்து குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள், மாந்தம், பேதி எல்லாம் சரியாகும்.
விஷப்பூச்சிகள் கடித்தால் தும்பைப்பூவையும், அதேஅளவு தும்பை இலையையும் எடுத்து நசுக்கிச்சாறு எடுத்து, அதில் கால் அவுன்ஸ் அளவு சாப்பிட வேண்டும். இதேபோல, பூ மற்றும் இலையை அரைத்து பூச்சிக் கடித்த இடத்தில் பற்று போட்டால் உடனே விஷம் முறிந்துவிடும்.
சொறி, சிரங்கு உள்ளவர்கள் தும்பைப்பூவையும், தும்பை இலையையும் மையாக அரைத்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து சுட்ட சீகைக்காயுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்துக் குளித்து வந்தால் பிரச்னை தீரும்.
பாம்புக் கடிக்கு முதலுதவி சிகிச்சை
தும்பை இலைகளை ஒரு கைப்பிடி அளவு நசுக்கி, உள்ளுக்குள் கொடுத்து, நிறைய தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும். தும்பை இலைச்சாறு 2 அல்லது 3 துளிகள் மூக்கிலும் விடலாம். இப்படிச் செய்தால் மயக்கம் தெளியவும் விரைவாக விஷமுறிவு ஏற்படவும் வாய்ப்பு ஏற்படும். இன்னும் பல மருத்துவ குறிப்புகள் தும்பை பற்றி இருக்கிறது.

No comments:
Post a Comment