யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை... அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது...
வாய் தவறி விழும் பேச்சுக்கள், கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது...
யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்...
நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப் படுவதில்லை...
வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை...
மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள் தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்...பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவன் குணம் இருந்தால் நீங்கள் குப்பை...
நடித்தால் நீங்கள் நல்லவன்... உண்மை பேசினால் பைத்தியக்காரன்.அன்பு காட்டினால் ஏமாளி, எடுத்துச் சொன்னால் கோமாளி...
நிலவை தூரத்தில் இருந்து ரசிப்பதை போல, சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்...
No comments:
Post a Comment