நமக்குள் நிறைய தெரியவில்லை.
உலவுகிறது தெரியுமா..?
நிதானமாக உண்ண தெரியவில்லை..
சத்தம் போடாமல் இங்கு நிறைய பேருக்கு பேசத்தெரியவில்லை..
அன்பை வெளிக்காட்ட தெரியவில்லை..
இயற்கையை ரசிக்க தெரியவில்லை..
குறை சொல்லாமல் சக மனிதனிடம் நேசம்காட்ட தெரியவில்லை..
பொறுமையாக பாதையை
கடக்க தெரியவில்லை..
மற்றவர்களிடம் பணிவுடன்
நடக்க தெரியவில்லை..
பந்தா இல்லாமல் பழக தெரியவில்லை..
பொது வெளியில் குப்பை போடக்கூடாது என்று தெரியவில்லை..
உடலை தூய்மையாக
வைத்திருக்க தெரியவில்லை..
மனத்தூய்மை பற்றி நினைக்க கூட தெரியவில்லை..
எதையும் நிதானமாக அனுபவிக்க தெரியவில்லை..
இன்னும் உள்ளது நிறைய நிறைய தெரியவில்லைகள்...
இருக்கும் வாழ்க்கை சில காலம். அதை அழகுற வாழ்வோம் நாமும்...
No comments:
Post a Comment