உத்தர பிரதேச அரசியலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறைமுகமாக ஆர்வம் காட்டி வருவதால், பா.ஜ.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 75, அடுத்த ஆண்டு ஜூலை வரை அப்பதவியில் நீடிப்பார். இந்நிலையில், அவர் மறைமுகமாக அரசியலில் ஈடுபடத் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கான்பூர் மற்றும் லக்னோவுக்கு அவர் பயணித்தார்.
இந்நிலையில் இம்மாத இறுதியில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். அப்படி அயோத்தி ராமரை தரிசிக்கும் பட்சத்தில் அங்கு வழிபாடு நடத்தும் முதல் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இருப்பார். இந்த செய்தி மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யைச் சேர்ந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த அயோத்தி பயணம் வாயிலாக மாநில அரசியலில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளது, பா.ஜ.,வினரை அதிருப்தி அடைய வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
No comments:
Post a Comment