Monday, August 2, 2021

மாவட்ட அரசின் முதல்வர் கப் சிப்......

 கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.

"குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?" என்று கேட்டான்.
"ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!" என்றான் காவலாளி.
அதற்கு மன்னன், "கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.
மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.
அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்ததை மறந்து விட்டான்.
காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.
"மன்னா!! இவ்வளவு நாட்களாக கடுங் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குளைத்து ,என்னையும் கொன்று விட்டது".
ஆம்!
நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி, மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். எனவே, அந்த வாக்குறுதிக்கு முன் சற்று யோசியுங்கள்.
நீட் ரத்து முதல் கையெழுத்து
மகளிர் மாதம் 1000
5 பவுன் நகை கடன் தள்ளுபடி
பெட்ரோல் டீசல் 5 ரூபாய் குறைப்பு
மாதம் ஒருமுறை மின் கட்டணம்
7 பேர் விடுதலை
பூரண மது விலக்கு
சிலிண்டருக்கு 100
கோட்டை முற்றுகை செய்யலாமா தலைமை அமைச்சரே?
May be an image of 1 person, standing and text that says 'SUN NEWS காப்போமி உருவாத்கு தேர்தல் BREAKING கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கோட்டைக்குள் வந்து கேட்கலாம் -மு.க. ஸ்டாலின்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...