Sunday, June 13, 2021

" பெண் ":

 முனிவன் சொன்னான்

பெண்ணென்றால் விஷமென்று
கவிஞன் சொன்னான்
பெண்ணென்றால் கவிதையென்று
புலவன் சொன்னான்
பெண்ணென்றால் இலக்கியமென்று
அறிஞன் சொன்னான்
பெண்ணென்றால் அழகிய புத்தகமென்று
சிற்பி சொன்னான்
பெண்ணென்றால் ஓவியமென்று
விஞ்ஞானி சொன்னான்
பெண்ணென்றால் ரகசியமென்று
காதலன் சொன்னான்
பெண்ணென்றால் இன்பமான வரமென்று
சித்தன் சொன்னான்
பெண்ணென்றால் பெரும் பேயென்று
பக்தன் சொன்னான்
பெண்ணென்றால் பூமாதேவியென்று
தமிழன் சொன்னான்
பெண்ணென்றால் அவள் தெய்வமென்று
பெண்ணோடு வாழும் மனிதனைக்
கேட்டால் அவன் சொன்னான்
ஆண்களைப் பின்னிக் கொண்டு
கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் சுகமான வாழ்க்கையென்று.🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...