Monday, September 5, 2022

ஆசிரியர் பணி.... அறப்பணி...

 நான் பணியேற்ற காலங்கள்ல சரியா படிக்கலைன்னா....

வகுப்பறை செயல்பாடுகள்ல கவனிக்கலைன்னா...
குறும்பு செய்யற மாணவர்களை..
இப்படி நிறைய மாணவர்கள் அடியும், திட்டும், வாங்கியிருக்காங்க...
அவங்க நிறைய பேர் காலைல இருந்து வாட்ஸ்அப் ல " ஆசிரியர் தின
வாழ்த்துகள்
" அனுப்பி இருந்தாங்க...
மனசு நிறைவா இருந்துச்சு...
ஸ்கூல் வந்து வண்டிய நிறுத்தறதுக்குள்ள.... எல்லா வகுப்பு மாணவர்களும் " டீச்சர் டீச்சர் னு"
வாழ்த்துகள்
சொன்னப்போ அளவு கடந்த ஆனந்தம் எனக்கு......
மன நிறைவான பணியை எனக்கு அருளிய
"எல்லாம் வல்ல இறைவனுக்கும்"
எனை ஈன்று, நற்கல்விதனை தந்த
என் பெற்றோர்களுக்கும்.....
'ஸ்கூல தான் நீ டீச்சர் '..
எனக்கு நீ மனைவி என
தினம் ஒரு முறையேனும்
நினைவுருத்துதலோடு...
பணி சார்ந்த என் வேலைப்பளுவில்
எனக்கு உறுதுணையாய் நிற்கும்
என் துணைவருக்கும்......
கை பிடித்து நடந்த நாள்முதல்
வளர்ந்த இந்நாள்வரை
தோழியாய் எனை வலம் வரும் ...
எப்பிறவி தவமோ.....
இப்பிறவியில்
நான் பெற்ற தவங்களாம்
என் மகள்களுக்கும்........
எனை வாழ்த்திய
என் தோழமைகளுக்கும்...
உறவுகளுக்கும்.......
என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...