Monday, September 5, 2022

அயோக்கியதனம்.

 🌹நம்மை மட்டும் இறைவன் சோதிக்கிறான். அயோக்கியதனம் பண்ணுறவன் ஜாலியாத்தானே இருக்கான்🌹


🌹இந்த இடத்தில் ஒன்று கவணிக்க வேண்டும்.  நாம் நல்லவர்கள் என்று நாமே சொல்லிக்கொள்வதும் ஒரு அயோக்கியதனம். நமக்கும் வாய்ப்பு கிடைத்தால் அயோக்கியனாக மாறுவோம் இது யதார்த்தம்.🌹


🌹உண்மையில் நல்லவராக இருப்பவர் கஷ்டங்களை தாங்கி கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்வார் இந்தளவுக்கே கஷ்டம் கொடுத்தியே அதிகம் தராமல் என நினைப்பார். அவன் நல்லா இருக்கானே என பொறாமை படமாட்டார்.🌹


🌹இது ஒருபக்கம் அயோக்கியத்தனம் பண்ணுகிறவன் அடுத்தவர் சொத்தை திருடறவன் சந்தோஷமா இருக்கிறான் என்று எப்படி சொல்லமுடியும். வெளியில் பந்தாவாக மனதுள் ஆயிரம் சோகங்களுடன் வெம்பி கொண்டிருக்கலாம் அல்லவா?🌹


🌹சுயநலமாக தன் குடும்பம் (மனைவி பிள்ளைகள் மட்டும்) என்று உழைப்பவர்கள் உறவுகளுக்கும் மற்றவர்களுக்கும் துரோகம் செய்து கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி பெரிய லெவலுக்கு வந்தவர்கள் பின்னாளில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளில் சுழன்று பிள்ளைகளுக்காக லக்ஷம் கோடி சம்பாதித்து வளர்ந்த பிள்ளைகள் கைவிட்டு வயோதிகத்தில் பெற்றோரை வஞ்சித்தது, உடன் பிறந்தோரை ஏமாற்றியது எல்லாம் நினைவுக்கு வந்து அதிலேயே மனம் பித்தாகி உழன்று மாண்டுவிடுவர் 🌹


🌹இப்படி சிலரை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்கள் இறைவன் பார்த்து கொண்டிருக்கிறான் என்பதை மறந்து ஆடியவர்கள்.🌹


🌹நாம கஷ்டப்படறோம் அடுத்தவன் நல்லா இருக்கானே என வருத்தப்படாதீர்கள் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப தண்டனையோ அவார்டோ தருகிறான் இறைவன் 🌹


🌹இறைவன் நம்மை பார்க்கிறான் என்று உணர்ந்தால் வாழ்க்கை சுகமாகிவிடும்.🌹

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...