Thursday, November 16, 2023

சமி என்ற பூகம்பம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகி ஒட்டு மொத்த நியூசிலாந்தையும் சூறையாடி விட்டார்

 9 வெற்றிகள் குடுத்த சந்தோசத்தை

ஒரே ஒரு தோல்வி கெடுத்து விடும் நம் தூக்கத்தையும் கெடுத்து விடும்
நல்ல வேளையாக நேற்று நமக்கு அந்த வலியை நமது அணி நமக்கு குடுக்கவில்லை
அதற்க்கு மிக முக்கியமான காரணம் ரோஹித்
முதலில் மித்ரன் ரோஹித் பற்றி சொல்லியே ஆக வேண்டும் அவருடைய பேட்டிங் மாற்றம் திட்டம் எல்லாமே அவருக்கு வெற்றியை தேடிகுடுத்திருக்கிறது
விராட் நேற்று பேட்டியில் சொன்ன ஒரு விஷயமும் அது தான்
(ரோஹித்)முதல் 10 ஓவருக்குள் பெரிய ஸ்கோர் அடிக்க நான் அடித்தளம் போட்டுவிடுவேன்
உன்னுடைய ரோல் (விராட்) நிதானமாக உன் விக்கெட்டை விடாமல் உன்னை சுற்றியே மற்ற வீரர்கள் இருக்கும் மாதிரியும் ஆட வேண்டும்
ஆட்டத்தை கடைசி வரை எடுத்து செல்ல வேண்டும் என்பது தான்
இது புரியாமல் சில ரோஹித் ரசிகர்கள் விராட் சுயநலமாக ஆடுகிறார் என்றும் ரோஹித் தியாக ஆட்டம் ஆடுகிறார் என்றும் பேசிகொண்டிருக்கிறார்கள்
கேப்டன் என்ன சொல்கிறாரோ அதை தான் ஒரு பிளேயர் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்
அதுவும் போக அதிரடியாக விளையாடினால் 100 அடிக்க முடியாது என்கிற தவறான எண்ணமும் அவர்களுக்குள் இருக்கிறது
சேவாக் என்ன செய்தாரோ அதே ரோல் தான் இப்போது ரோஹித் செய்து கொண்டு இருக்கிறார்
சேவாக் 100 அடிக்கவில்லையா அவரது அதிரடி அவருக்கு தோல்வியா குடுத்தது??
விராட் ரோஹித் தரமான புரிதலுடன் இருக்கிறார்கள் அதை கெடுக்க நினைக்க வேண்டாம் மக்களே
விராட் தனது மிக பெரிய சாதனையான 50 ஆவது சதம் அடித்தவுடன் தனது தலைவன் சச்சின்க்கு நன்றி தெரிவித்த தருணம் ஆகட்டும்
ஒரு வேளை கோப்பையை வென்றால் தனது குருவான தோனிக்கு நன்றி சொல்லும் தருணம் ஆகட்டும்
தனது மித்ரன் ரோஹித்காக கோப்பையை வென்று குடுக்கும் முனைப்பு ஆகட்டும்
விராட்க்கு நிகர் இந்த உலகில் விராட் மட்டுமே
ஷார்ட் பால் பௌன்சர்கள் அதிகமாக ஆகும் ஆடுகளங்களில் ஸ்ரேயஸ்க்கு பௌலர்கள் எமன்
அதேபௌன்சர் ஆகாத ஆடுகளங்களில் ஷ்ரேயஸ் தான் பௌலர்களுக்கு எமன்
அவர் அந்த தாடியை எடுத்து பழையகாலத்து mgr, சிவாஜி, ஜெமினியை போல மீசையை வைத்ததும் அவருக்கு ஒரு ராசி போல சேர்ந்து கொண்டது!!!தீப்பொறி ஆட்டம்
ராகுல் drs வேண்டாம் என்று சொல்லுவதாக இருக்கட்டும் எடுப்பதாக இருக்கட்டும் கேட்ச் பிடிப்பதாக இருக்கட்டும் மெருகேறிஇருக்கிறார்
குய்க் பயர் நாக் ஆடுவதிலும் அணிக்கு பேருதவியாக இருக்கிறார்
மிட்ச்சல் என்னும் கொள்ளைகாரன் இந்தியாவின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் கொள்ளை அடிக்க பார்த்தார்
200 அடித்த மேக்ஸ்வெல்லை மீண்டும் கண் முன்னாடி கொண்டு வர பார்த்தார் தரமான ஆட்டம்
சமி என்ற பூகம்பம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகி ஒட்டு மொத்த நியூசிலாந்தையும் சூறையாடி விட்டார்
டியர் சவுத்ஆப்பிரிக்கா!! எங்க knock அவுட் எதிரியான நியூசி அணிய நாங்க பொளந்துட்டோம்
1999ல மறக்கமுடியாத உங்க knock அவுட் எதிரியான ஆஸ்திரேலியா அணிய ஜெயிச்சுட்டு வாங்க மோதி பாக்கலாம்
ஒரு வேளை நீங்க விட்டா 2003 காக நாங்க ஆஸ்திரேலியாவ பாத்துக்குறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...