1. கரைந்திடும் நிமிடங்களை ரசித்து கொண்டாடி மகிழ்ந்திருப்போம்.
2. முன்னறிவிப்பு இல்லாமல் எங்கும் செல்வதை தவிர்த்திருப்போம்.
3. எங்கேயும் அதிக நேரம் இருக்காமல், யார் மனதையும் இறுக்காமல் இருக்க பழகுவோம்.
5. நம்மை மதியாரை நம் எண்ணத்திலும் தவிர்த்திடுவோம்.
6. எளிய வாழ்க்கைக்கு எல்லோரையும் பழக்குவோம்.
7. இனிய சொல்லிலே, உள்ளது உரைத்திடுவோம்.
8. பசித்திடும் வேளையிலே, பகை மறந்து பகிர்ந்து உண்போம்.
8. பேச்சிலும், எழுத்திலும் & கருத்திலும் சுருங்கச் சொல்லி புரிய வைப்போம்.
9. நேர நிர்வாகத்தை எல்லா வேலையிலும் இடை சொருகுவோம்.
10. நமக்கான தேவை இல்லாத இடத்திற்கு செல்வதை கண்டிப்பாக தவிர்த்திடுவோம்.
11. நமக்கான மனிதர்களை தினமும் சம்பாதிப்போம்.
No comments:
Post a Comment