கடவுளே நமக்கு துணையாக இருந்தாலும் ..
அந்த செயல்களில் கடவுள் அருள்புரிந்து வெற்றியை தருவார் ..
ஆனால் .
2016 இறுதியிலிருந்து ஓபிஎஸ் செய்தது என்ன ???
கொஞ்சநாட்கள் பொறுமை காட்டியிருந்தால் ..
மீன்டும் முதல்வராகவே வந்திருக்க முடியும் .
(ஆனால் ஓபிஎஸ் விசயத்தில் சசிகலா அவசரபட்டு அவரை பதவிவிலக சொன்னது மாபெரும் அரசியல் தற்கொலையாக சசிகலாவுக்கு மாறியது )
ஆனால் .
குருமூர்த்தியின் பேச்சை கேட்டு கட்சியை உடைத்தார் ..
ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்று தெரிந்தும் ..
தனது 11எம்எல்ஏக்களை .
ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வைத்தார் ..
ஓரளவுக்கு இவர் நடத்திய தர்மயுத்தத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்து வந்த நிலையில் ..
தினகரனுக்கு ஆதரவான 18 பேர் தகுதிநீக்கபட்ட போது ..
எடப்பாடியின் ஆட்சி கவிழும் நிலை வந்தபோது ..
பாஜகவின் பேச்சை கேட்டு சமரசமாக போனார் .
சமரசத்தில் கூட தனக்கான அதிகார பலத்தை பெறாமல் கோட்டை விட்டார் .
மோடி சொன்னதால் எடப்பாடியுடன் சேர்ந்தேன் என்று ஓபனாக பேசி .
தனது ஆதரவு நிலைபாட்டை ..
அடிமை நிலைப்பாட்டாக காட்டிகொண்டார் ..
2019 தேர்தலில் மகனின் வெற்றிக்காக 300 கோடி ரூபாய் வரை செலவு செய்து .
ஜெயிக்க வைத்த இவரால் .
சொந்த தொகுதியான பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி இடைதேர்தல்களில் .
அதிமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க முடியவில்லை .
அன்று மட்டும் இவர் மகனுக்கு இணையாக இவர்களுக்கும் செலவு செய்து ஜெயிக்க வைத்திருந்தால் ..
கட்சியில் இவரின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் ..
இதன் காரணமாய் எடப்பாடி பலம்பெற ..
இவரே வழிவகுத்தார் .
இவர் நம்பிய பாஜகவும் .
மெதுவாக பழனிசாமி பக்கம் சாயதொடங்கியது .
அவ்வப்போது சசிகலா பெயரை சொல்லி எடப்பாடியை பயமுறுத்தி வந்தார் ..
ஆனாலும் 2021ல் எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் ஆனார் ..
அதையும் இவரை வைத்தே முன்மொழிய வைத்தார் பழனிசாமி ..
அன்றே இதை எதிர்த்து களமாடி இருந்தால்..
பி பார்மில் கையெழுத்திடு்ம் அதிகாரம் இவரிடம் இருந்ததால் ..
பழனிசாமி பனிந்திருப்பார் ..
ஆனால் பாஜகவின் பேச்சை கேட்டு இவர்தான் பனிந்து போனார் ..
2021 தேர்தலிலும் .
இவரால் தன் தொகுதி தவிர சொந்த மாவட்டத்தில் வேறு தொகுதிகளை ஜெயித்து கொடுக்க முடியவில்லை .
அதிமுகவில் .
தினகரன் கனிசமாக வாக்குகளை பிரித்த போதும் .
தின்டுக்கல் சீணிவாசன் உதயகுமார் ..
ராஜன் செல்லப்பா .
செல்லூர் ராஜூ .
காமராஜ் .
விஜயபாஸ்கர் .
மனியன் .
ஆகிய முக்குலத்தோர் தலைவர்கள் அசால்டாக ஜெயித்தனர் .
ஆக ..
இவர் இன்னொரு மாவட்டசெயலாளர் லெவல்தான் ஓபிஎஸ் என்பது பழனிசாமிக்கு நன்றாக தெரிந்து விட்டது ..
தைரியமாய் ஓபிஎஸ்சை ஓரங்கட்டும் முடிவை எடுத்து .
இன்று அதை பழனிசாமி நிறைவேற்றியும் காட்டிவிட்டார் ..
ஆனால் இவற்றில் எதையுமே ஓபிஎஸ் உணர்ந்ததாய் தெரியவில்லை ..
தனது கட்சிகாரர்கள் சிலரையாவது வெற்றிபெற வைக்க வேண்டும் அவர் ..
தான் தனதுமகன்
என்று மட்டும் செயல்பட்டால் இன்னும் அவருக்கான அரசியல் மோசமாகி விடும் .
இவர் நம்பிய பாஜக .
எல்லாவற்றிலுமே இவரை ஏமாற்றிவிட்டது .
இனியாவது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் கிடைக்கும் இடங்களில் .
கட்சிகாரர்களை நிறுத்தி .
பெரியளவில் செலவு செய்து சிலரையாவது ஜெயிக்க வைத்தால்தான் ..
இவரை இவரது விசுவாசிகளே நம்புவார்கள் ..
தற்போது செய்திகளில் வருவது போல் தன் மகன்களுக்கு மட்டும் இரண்டு சீட்டு வாங்கி ..
தேர்தல் அரசியல் செய்தால் ..
நிச்சயம் அரசியலில் இவர் நீடிப்பது கடினம் ..
என்ன செய்யபோகிறார் ஓபிஎஸ் ???
No comments:
Post a Comment