ஒரு காலத்தில் பார்ப்பான் எல்லா அதிகாரமும் வைத்திருந்தான், நாங்கள்தான் ஒடுக்கினோம், புரட்சி செய்தோம் என மார்தட்டுகின்றார்கள் கருப்பு சட்டை அணியும் திராவிட இம்சைகள்.
ஆண்டாண்டு காலமாக அதிகாரம் வைத்திருந்தான் என இவர்கள் குற்றம்சாட்டும் பிராமண இனம் இன்னும் ஏழையாகவே இருக்கின்றது.
வெறும் 50 வருடம் முன்பு அரசியலுக்கு வந்த திராவிட வாரிசுகளின் சொத்துமதிப்பு தலைசுற்றவைக்கின்றது.
அவர்கள் நீதித்துறை மருத்துவத்துறை என அனைத்து துறைகளிலும் கடமையினை சரியாக செய்த கூலிக்காரனாய் இருந்திருக்கின்றார்கள்.
இவர்களோ அவர்களிடமிருந்து ஆட்சியினை மீட்கின்றோம் என சொல்லி மிக குறுகிய காலத்தில் 100 தலைமுறைக்கு சேர்த்திருக்கின்றார்கள்.
கூட்டி கழித்து பார்த்தால் பார்ப்பான், பகுத்தறிவு என சொல்லி சொல்லி இவர்கள் குவித்திருக்கும் சொத்து பெரும் மலைப்பினை கொடுக்கின்றது.
லண்டன் ராஜகுடும்பத்திற்கு இருக்கும் சொத்துக்க்கு ஈடாக சில திராவிட தமிழக அரசியல்வாதியிடமே இருக்கின்றது.
இவர்களை ஒப்பிடும் பொழுது இன்றும் சம்பளத்தை தவிர ஏதும் எதிர்பார்க்கா பிராமண இனம் சாலசிறந்தது.
மன்னனுக்கு அருகில், வெள்ளையனுக்கு அருகில் , இந்திய ஆட்சிபீட உச்சத்தில் இருந்தாலும் அந்த பிராமண இனம் இப்படி சுருட்டியதில்லை.
அவர்களும் சுருட்டியிருந்தால் நாடு தாங்கியிருக்காது, மிக சரியான சேவையினை நாட்டுக்கு அவர்கள் செய்திருக்கின்றார்கள்.
பெரும் பணம் குவித்தவன் என அவர்களின் ஒருவனை உங்களால் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது!
அப்துல் கலாமும் அவர்களை போலத்தான் வாழ்ந்தார், காமராஜரும் அப்படி வாழ்ந்தார்.
இன்றும் காமராஜர் குடும்பமும், கலாம் குடும்பமும் உழைத்தே அன்றாடங்காய்ச்சியாக வாழ்கின்றன..
மோடியின் சகோதரர் கூட எளிமையாக வாழ்கின்றார்.
ஆனால் திராவிட சிங்கங்களின் 3ம் மனைவியின் 4ம் பங்காளி அரபு சுல்தானுக்கு இணையாக வாழ்கின்றார்.
திராவிட சிங்கங்களை விடுங்கள், அவர்களிடம் அடிப்பொடியாக இருப்பவனே சில நூறு கோடிகளுடன் வலம் வருகின்றான்.
அட எழுத்தாளனையே எடுங்கள்..
ஜானகிராமன் சுஜாதாவினை விட ஒரு எழுத்தாளனை காட்டமுடியுமா? ஆனால் என்ன சம்பாதித்தார்கள்?
இங்கோ திமுக அதிமுகவின் இம்சை கவிஞர்களின் சொத்து, அவர்களை விட பன்மடங்கு இருக்கின்றது. எப்படி சாத்தியம்?
சுஜாதாவிற்கு சொந்த அச்சகம் கூட இல்லை. ஆனால் திராவிட எழுத்தாளர்களுக்கு ஏராளம் இருக்கின்றது.
எப்படி வந்தது இதெல்லாம், ஒவ்வொரு துறையாக ஒப்பிட்டு பாருங்கள். அந்த பொற்காலமும் இந்த சொத்துகுவிப்பு காலமும் புரியும்.
பிராமண இனம் அதன் அதிகாரத்தில் இருந்த காலத்தில் மிக தூய்மையான பொதுவாழ்வில் இருந்திருக்கின்றது.
பெரும்பாலான பிராமணர்கள் உத்தமர்கள். அதை சொல்ல கொஞ்சமும் தயக்கமே இல்லை எனக்கு....
No comments:
Post a Comment