Friday, September 2, 2022

*சுற்றி வளைக்கப் படும் காந்தி குடும்பம்!*

 தனித்துப் போரிடுவதா? தப்பி ஓடுவதா? குழம்பிப் போயுள்ள காந்திகள்!

🐶
நேஷனல் ஹெரால்ட் கேஸும், PMLA Act ம் போதும், காந்திகளை ஜெயிலில் தள்ள! ஆனால், செய்யவில்லை! ஏன்?
நேஷனல் ஹெரால்ட் கேஸ் சம்பந்தமாக தொடர்ந்து ராகுல், சோனியா காந்திகளுக்கு ED விசாரணை மூலம் பெரும் அழுத்தங்கள் கொடுக்கப் பட்டது. அந்த பத்திரிக்கை ஆபீஸ் சீல் வைக்கப் பட்டது. வீட்டை சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப் பட்டது. அதன் விசாரணையின் முடிவிலேயே அவர்கள் கைது செய்யப் பட்டிருக்கலாம்.
ஏன், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே சுப்பிரமணியன் சாமி, அவர்கள் பெயிலில் வெளிவர ஆட்சேபணை செய்திருந்தால் அவர்கள் அன்றே கைது செய்யப் பட்டிருக்கக் கூடும். ஏனெனில், அந்த ஆதாரங்களும், சட்டங்களும் அவ்வளவு கடினமானவை.
*ஆனால், அவரும் செய்யவில்லை. 8 வருடங்களாக மோடி அரசும் அதை செய்யவில்லை.*
ஏனெனில், அப்படிப்பட்ட கைதுகள் காந்தி குடும்பத்தின் மேல் ஒரு பரிதாப உணர்வை மக்களிடையே விதைத்து அவர்களுக்கு மீண்டெழ ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட வாய்ப்புகள் உண்டு. அதனால் கடும் அழுத்தங்கள் மூலம் 'அடுத்து உள்ளே செல்வோம்' என்ற ஒரு சூழ்நிலையில் அவர்கள் நாட்டை விட்டு ஓட வேண்டும். அப்படி ஓடி விட்டால், அவர்கள் மக்களின் மனதில் மட்டும் என்ன, கட்சிக்காரர்களின் மனதிலிருந்தே அகற்றப் படுவார்கள். அப்போது அரசியல், சட்ட ரீதியாகவும் அவர்களை கைது செய்வது பெரிதல்ல.
இன்றைய சூழ்நிலையில் அவர்கள் எங்கு போனாலும் இந்திய அரசின் அழுத்தங்கள் மூலம் இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வந்துவிட முடியும். அவர்களுக்கு இயற்கையாகவே இத்தாலியின் குடியுரிமை இருப்பதால் அதை புதுப்பித்து அவர்கள் அங்கே எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனால் இத்தாலி சட்டங்களோ அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. மேலும், இத்தாலி அரசு எளிதாக இந்திய அரசின் அழுத்தத்திற்கு பணிந்துவிடும் என்பதால்தான், ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமையும் வைத்திருக்கிறார். மல்லையாவும், நிரவ் மோடியும் ஏற்கனவே அங்கு ஒளிந்திருக்கிறார்கள். அவர்களை இன்னும் கொண்டு வரவில்லை என்பது, இவர்களுக்கு "அது பாதுகாப்பானது" என்று ஒரு மாயையைத் தோற்றுவிக்கும் எலிப்பொறி!
*காந்திகள் வெளிநாடு செல்வதை ஒரு லுக் அவுட் நோட்டீஸ் மூலம் முன்கூட்டியே தடுத்து விடவும் முடியும். ஆனால், அதை ஏன் செய்யவில்லை?*
அப்படி செய்தால் அவர்கள் அந்த தவறை செய்யும் வழி மூடிவிடும். அவர்கள் உலகம் முழுவதும் பதுக்கி வைத்திருக்கும் பணங்கள் மூலம், வேறு சில நாட்டில் உள்ள சட்டங்களின் உதவியால், அவர்கள் கொஞ்ச நாள் ஒளிந்து வாழ முடியும் என்றதொரு தோற்றத்தை அரசு செய்கிறது. அது மட்டுமல்ல, சோனியாவின் உடல்நிலை மோசமாகவே உள்ளது.
அவர் ஜெயிலில் அடைக்கப் பட்டால் உடல்நிலை மோசமாகி எப்போது வேண்டுமானாலும் முடிவு சாத்தியமாகலாம். அப்படிப்பட்ட முடிவுகள், 'மோடி கொன்று விட்டார்' என்ற எண்ணத்தையே மக்களிடம் விதைக்கும் அல்லவா?
அவர்களுக்கு சீனா அடைக்கலம் தர முடியும். ஆனால் செய்யாது. காரணம், சமீபத்தில் சீனாவின் செல்லப்பிள்ளை ராஜபக்‌ஷேவிற்கே கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டால், நம் நாடு சீனாவிற்கு முற்றிலும் எதிராக மாறிவிடும் என்பதால் அதன் வர்த்தக இழப்புகள் மிகப் பெரியதாக இருக்கும் என்பதை சீனா நன்கு உணர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, அவர்கள் கூட்டுக் களவாணித் தனத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக ஆகி விடாதா?
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் வேளியேறுகின்றனர். கட்சிக்கு தேர்தல் நடத்த தேதி October 17 என்று குறிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அசோக் கெலாட் போல ஒரு அடிமையை அந்த பதவியில் அமர்த்துவார்கள். ஆனால், அங்கே போட்டி என்று வந்து விட்டாலே அந்த கட்சி குடும்பத்தின் கைகளிலிருந்து நழுவி கட்டுப்பாடிழந்து கலகலத்துப் போய் விட்டதாக அர்த்தம்.
நமக்கே இவ்வளவு விஷங்கள் தெரியும்போது, அரசு எவ்வளவு யோசிக்கும்! அதைவிட, கார்னர் செய்யப்பட்ட காந்தி குடும்பம் எப்படி யோசிக்கும்!!
அதற்கு மாற்றாக, 'காந்தி குடும்பம் பாதுகாப்பாக வெளியே செல்ல வேண்டும்; ஆனால், ஓடிப் போனதாக அது அர்த்தம் ஆகிவிடக் கூடாது' என்பதால், சோனியாவின் உடல் நிலையைக் காரணமாக்கி சிகிச்சைக்காக குடும்பத்தோடு வெளிநாடு செல்கிறார்கள். பொதுவாக யாரோ ஒருவர் உடன் செல்வார்கள். இந்த முறை எல்லோரும் உடன் செல்வதை நாம் கவனிக்க வேண்டும்.
அவர்கள் வெளிநாடு சென்றபின் மேலும் ஆணிகள் இறுகும். சட்ட நடவடிக்கைகள் சுற்றி வளைக்கும். அது 'அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப் படலாம்' என்ற சூழலை உருவாக்கும். எனவே, அவர்கள், முக்கியமாக சோனியா கைதாவதைத் தடுக்க, உடல் நிலையைக் கருதி திரும்பி வருவதைத் தடுக்கும். அந்த தவறை செய்து விட்டால் அவர்கள் அரசியல் அஸ்தமனமாகி விடும்; செய்யா விட்டால் அவர்கள் வாழ்க்கை சூனியமாகி விடும்.🙄
அதே வேளையில் ராகுல் காந்தி ஏற்கனவே அறிவித்த 'இந்தியா முழுவதுமான கால்நடைப் பயணம்' தொடங்கியாக வேண்டும். ஏனெனில், கட்சித் தேர்தலில் போட்டியின்றி அசோக் கெலாட் போன்ற ஒருத்தரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், 'அவர் தீவிர அரசியலில் உள்ளார்' என்பதை மக்களிடையே பரப்பவும், கட்சி தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நிரூபிக்கவும் இது அவசியம். எனவே சோனியா அங்கேயே தங்கி சிகிச்சையை தொடரவும், ராகுல் திரும்பி வரவே வாய்ப்புகள் அதிகம் உண்டு.
*இந்த சூழ்நிலையில் மோடி அரசு என்ன செய்யும்?*
அவர்களை சட்டத்தின் மூலம் மட்டுமே தண்டிக்கவும், அவர்களை தனிமைப் படுத்தவும் காய் நகர்த்தும்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் எனவென்றால், காந்தி குடும்பத்திற்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் ஏராளம். அது அவர்களின் ராஜபோக வாழ்க்கையை உறுதி செய்யும். ஆனால், அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் என்ற அங்கீகாரமே அவர்களை காக்கும் வளையம்.
அது மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் சொத்துக்கள் ஏராளமானவை. அரசியலைக் கூட விட்டுக் கொடுக்க காந்தி குடும்பம் சம்மதிக்கலாம். ஆனால் கட்சியின் சொத்துக்களை இழக்க கடைசி வரை போராடும் என்பதால், தன் அடிமைகளை மட்டுமே வைத்து அரசியல் கட்சியை தன் கைக்குள் வைத்திருக்க பகீரத பிரயத்தனம் செய்யும் என்பதை யாராலுமே மறுக்க முடியாது.
இது சாதாரணமாகப் பார்த்தால் ஏதோ சப்பை மேட்டர் என்று தோன்றும். எவ்வளவு சிக்கல்கள் இதன் பின்னால் ஒளிந்திருக்கிறது என்பது இப்போது புரிந்திருக்கும். இந்த செஸ் போட்டியில் மோடி அரசு செக் & மேட் செய்யவே முயற்சிக்கிறது. PMLA Act மூலம் இன்றுகூட அரெஸ்ட் செய்ய முடியும் என்றாலும் அதை மோடி அரசு செய்யாது. அதற்கு மாற்றாக தாமதமானாலும் வழக்கின் மூலமாக நீதிபதியால் தண்டிக்கப்படவோ அல்லது இந்த Status Quo தொடர்ந்து, தேர்தல் மூலமோ, முற்றிலுமோதான் வீழ்த்தப் படுவார்கள்.
அதற்காக, சுற்றி இருக்கும் காய்களை ஒன்றன்பின் ஒன்றாக வெட்டி எடுக்கிறது. அதில் நம்ம பசி போல எக்கச்சக்கமாக ஊழல் செய்து மாட்டிக்கொண்ட மந்திரி, யானை, குதிரைப்படை அந்த குடும்பத்தை விட்டு வெளிவர மாட்டார்கள். அவர்கள் வெளியேறினாலோ, வீழ்த்தப்பட்டாலோ *காந்திகளுக்கு களி ரெடியாகி விட்டது* என்பதுதான் அர்த்தம்.
அதை காந்தி குடும்பம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்வி. உங்களுக்கு ஏதேனும் மாற்று வழிகள் தெரிந்தால் காந்திகளுக்கு சொல்லுங்கள்.
இன்றைய நிலையில், கார்னர் செய்யப்பட்ட காந்திகள்!
*ஜெய் ஹிந்த்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...