விநாயகர் சதுர்த்தி க்கு தமிழக முதல்வர் உட்பட திமுகவினர் யாரும்
வாழ்த்துக்கள்
சொல்லவில்லை.
ஆனால் தமிழக இந்து அறநிலையத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் 'விநாயகர் சதுர்த்தி
வாழ்த்துக்கள்
' என்று பதிவிட்டிருந்தது.இந்த ட்விட்டரை மேற்கோள் காட்டி திமுகவின் தர்மபுரி எம்பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்
என்று பதிவிட்டுள்ளார்.
அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
அதற்கு முன் மருத்துவர்.
அவர் தன்னை பகுத்தறிவாளராகவும், மதச்சார்பற்றவராகவும் காட்டி கொள்வதற்காக தொடர்ந்து இந்துமத விரோத கருத்துக்களை பேசியபடியே இருக்கிறார்.
ஏற்கனவே பூமி பூஜையின் போது இந்து மத அவமதிப்பு செய்த அவர் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே இனிமேலும் தொடரப்போகிறார் என்பது உறுதி.
பாஜகவிற்கு தர்மபுரியில் செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ அது நமக்கு தேவை இல்லை.
திமுக சார்பில் தர்மபுரியில் மீண்டும் செந்தில் குமாரையே வேட்பாளராக அறிவிப்பார்கள்.
ஆனால் இந்த முறை தர்மபுரியில் இந்து தர்மத்தை நிலைநாட்டியாக வேண்டும்.
தர்மபுரி மட்டும் அல்ல சுற்றியுள்ள அனைத்து பகுதி பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஒவ்வொருவரும் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தங்களது மேலான தேர்தல் பணியினை இப்போது இருந்தே தொடங்க வேண்டும்.
இந்து மதத்தின் மீதான அவரது வன்மத்திற்கு எதிராக நாம் வாக்கு சீட்டை பயன்படுத்துவோம். அவரது வன்மம் மிகுந்த சேவை நமக்கும், இந்த நாட்டிற்கு தேவை இல்லை.
ஒவ்வொரு இந்துவும் செந்தில் குமாரை தோற்கடிக்க கண்டிப்பாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.
தர்மபுரியில் இந்து தர்மத்தை தழைத்தோங்க செய்ய வேண்டும்.
சிறுபான்மை ஓட்டுக்களுக்காக தொடர்ந்து இந்து விரோத செயல்பாடுகளை ஊக்குவிக்கும் திமுகவை தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும். அதிலும் செந்தில் குமாரை லட்சக்கணக்கான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக வேண்டும். அதுவே நமது முதல் கடமை.
வைரவேல் சுப்பையா
தமிழ் நாட்டில் வாழும் அதிகபட்ச இந்துக்கள் தொடர்ந்து சொரணை அற்றவர்களாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!!
No comments:
Post a Comment