Friday, June 16, 2023

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி :

 "தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை. அமலாக்கத் துறை நடவடிக்கை மனித உரிமை மீறல். அவர்களின் செயல்பாடு ஜனநாயக நாட்டில்தான் நாம் இருக்கிறோமா என்ற கேள்விகளை எழுப்புகிறது".

அடேங்கப்பா...
ஜனநாயகம் குறித்து நமது தமிழக சட்டத்துறை அமைச்சர் ரொம்பத்தான் வருத்தப்படறார்.
சமூக வலைத்தளங்களில் தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததற்காகவே முறையான வாரண்ட் ஏதும் இல்லாமல் எத்தனை பேரை நள்ளிரவு நேரங்களில் கொடுங்குற்றவாளிகளை கைது செய்வது போல அணுகி அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் ஜனநாயகம், தனி மனித உரிமை குறித்தெல்லாம் அக்கறை கொள்ளாத தமிழக அரசும், சட்டத்துறை அமைச்சரும் தற்போது உரிமை மீறல், ஜனநாயகமா? என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
'வினை விதைத்தவன் வினையறுப்பான்'.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...