Tuesday, November 14, 2023

ஊருக்கு உபதேசம் பண்றோம்.

 புல்லா குடிச்சிட்டு கார் ஓட்டிட்டு வர்றவனை செருப்பால அடிக்காத *#பொண்டாட்டி*

கண்ணுமண்ணு தெரியாம பைக்கு ல பறக்கும் புள்ளைய வெளக்கமாத்தால வெளுக்காத *அம்மா*
கால் எட்டாத வயசுல பைக் எடுத்து சுத்தும் புள்ளைய பார்த்து பூரித்து போகும் *#அப்பா*
நெடுஞ்சாலையில் எப்ப ஹைபீமை டிம் பண்ணனும்னு கூட தெரியாத டிரைவரை கண்டுக்காத *#குடும்பங்கள்*
பெட்ரோல் டேங்கில் தூங்கும் புள்ள, பின்னாடி ஒரு கைல ஷாப்பிங் பேக், இன்னொரு கைல புள்ளனு வண்டிய புடிக்காம உட்காரும் பொண்டாட்டியோட எல்லா சிக்னலையும் தவறாமல் ஜம்ப் அடிக்கும் *#குடும்பஸ்தன்.*
ரியர் வீயூ மிரர் வண்டி அழகை கெடுக்குதுன்னு அத கழட்டி வைக்கும் *#பசங்க*
கொஞ்சம் கூட டிரைவிங் சென்சே இல்லாம தன் அப்பன் ஊட்டு ரோடு மாதிரி எருமை கணக்கா சிக்னல் போடாம வண்டிய திருப்புற *#பொண்ணுங்க..*
இவங்க எல்லாம்
#செவ்வாய்_கிரகத்துல இருந்து வரலை.
நம்ம வீடுகளில் இருந்துதான் கிளம்பறாங்க.
இவங்களை தட்டி கேட்ட துப்பில்லாத *#நாம* தான் ஊருக்கு உபதேசம் பண்றோம்.
எந்த தப்பு பண்ணிட்டு போனாலும் நமக்கு சப்பை கட்டு கட்ட,*#குடும்பம்* வரும்கிற திமிர் தான் எல்லா தவறுகளுக்கும் காரணமா இருக்கு.தன்னை முதலில் திருத்திக்க வேண்டும்...
No photo description available.
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...