90களில் ஏகப்பட்ட ஹிட் கொடுத்த இயக்குனர்.
ரஜினி கமல் கார்த்திக் விஜயகாந்த் பிரபு அர்ஜுன் என முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்து படம் எடுத்த இயக்குனர்.
முதல் படம் உரிமை கீதம் அடுத்து உறுதிமொழி என்று சுமாரான படங்கள் கொடுத்தவர்.
அடுத்து இளையராஜாவின் இசையில்
தாங்குற தத்தோம் தரிகிட தத்தோம் அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்
கொடுத்தவர்.
அவர்தான் ஆர்வி உதயகுமார்
திரைப்பட கல்லூரியில் பயிற்சி முடித்து விட்டு வந்து படம் எடுத்தவர்கள் இல் இவரும் ஒருவர்.
தொடர்ந்து ரஜினியை வைத்து எஜமான்
விஜயகாந்துடன் சின்ன கவுண்டர்,
கார்த்திக் உடன் பொன்னுமணி .
கமலுடன் சிங்காரவேலன்,
பிரபுவுடன் ராஜகுமாரன்,
என ஏகப்பட்ட ஹிட் கொடுத்தவர்
அத்தனைப் படங்களிலும் இளையராஜா இவருக்கு
அருமையான
பாடல் கொடுத்தார்.கிராமத்து படங்கள் அழகான காட்சிகள் .அற்புதமான வசனங்கள் ,இளையராஜாவின் இசை ,தனக்கே உரிய பாணியில் படங்கள் செய்து அதை வெற்றி கரம் ஆக்கியவர்.
தனது படங்களின் பாடல்கள் இவருக்கும் பங்குண்டு
ஆம் பாடல்களும் எழுதுவார்
சில நல்ல டைரக்டர்கள் சில இடங்களில் சறுக்குவது உண்டு
அதுமாதிரிதான் இவரும்
தானே ஹீரோவாக நடித்தார் படத்தின் பெயர் சின்ன ராமசாமி பெரிய ராமசாமி அந்த படம் இன்று வரை வெளியாகவில்லை அதுவும் நல்லதுதான்.
இல்லையென்றால் இவர் ஹீரோவாக நடிக்க போயிருப்பார்.
பார்க்க தான் நாம் தயாரில்லை
ஆர் வி உதயகுமார் கொண்டாடப்படவேண்டிய இயக்குனர்களில் இவரும் ஒருவர்தான்.
காலங்கள் மாறலாம்
ரசிகர்களின் ரசனை மாறுவது உண்டு
முத்து மணி மாலை
பச்ச மலப் பூவு
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா
பாடல்கள் ஆர் வி உதயகுமார் இன் பேர் சொல்லும் பாடல்கள்
மறக்கமுடியாத திரைப்பட இயக்குனர்களில்,ஆர் வி உதயகுமாரும்ஒருவர்.
நன்றி...
No comments:
Post a Comment