தி.மு.க., பொதுக்குழு கூட்ட மேடையில், பொருளாளர் டி.ஆர்.பாலுவின் செருப்பை, தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்து கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
புதிய நிர்வாகிகள் அறிவித்ததும், கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள், மேடையின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர்.
அதற்கு முன், தங்கள் காலில் இருந்த செருப்பை கழட்டி போட்டனர். மரியாதை செலுத்திய பின் செருப்பை அணிந்து மேடையில் அமர்ந்தனர்.
ஆனால், பொருளாளர் டி.ஆர்.பாலு தன் செருப்பை அணிய மறந்து, இருக்கையில் அமர்ந்து விட்டார். அப்போது, தன் செருப்பை எடுத்து வரும்படி தொண்டர் ஒருவரிடம் கூற, அவரும் தன் கையில் செருப்பை எடுத்து வந்து, டி.ஆர்.பாலு கால் அருகே வைத்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த நெட்டிசன்கள், 'இதுதான் தி.மு.க.,வின் சமூக நீதியா; திராவிட மாடலா?' என்பது போன்ற கேள்விகளை பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment