Tuesday, June 14, 2022

இதை படித்த பிறகு கூட திருந்தவே மாட்டார்கள்.

 ஏன்மா பட்டப்பகலில் நீங்க வீட்ல இருக்கும் பொழுது ஒன்றரை மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த திருடன், ஒரு மணி நேரத்தில வீட்டில் இருக்கிறது எல்லாத்தையும் திருடிட்டு போயிருக்கான், கவனிக்காம நீங்க என்னமா செஞ்சிட்டு இருந்தீங்க?

சார், நான் ஒரு மணியாகும்போது ஒரு போஸ்ட் போட்டேன் சார், 1.15 க்கு அப்ரூவ் ஆச்சு சார். கடகடன்னு கமெண்டும் லைக்கும் வர ஆரம்பிச்சது சார்.
யாரெல்லாம் லைக் போட்டு இருக்காங்கன்னு கிளிக் பண்ணி கிளிக் பண்ணி பார்த்தேன் சார்.
அப்புறம் கமெண்ட்டுக்கு எல்லாம் பதில் சொல்ல ஆரம்பிச்சேன் சார்.
பாராட்டினவங்களுக்கு நன்றி மகிழ்ச்சினு பதில் குடுத்தேன் சார்.
நான் பதிவில் சொன்னது தப்பு அப்படின்னு சொன்னவங்களுக்கு எல்லாம் நான் சொன்னதுதான் கரெக்ட்டு அப்படின்னு விளக்க ஆரம்பித்தேன் சார்.
நான் வழக்கமாக கமெண்ட் லைக் போடுறவங்க எல்லாரும் வந்து கமெண்டும் லைக்கும் போட்டுட்டாங்களான்னு செக் பண்ணினேன் சார்.....
நான் போஸ்ட் போட்ட அதே நேரத்துல போஸ்ட் போட்டவங்களுக்கு என்னை விட அதிகமா கமெண்ட் வந்திருக்கான்னு ஒரு ரவுண்டு போய் பார்த்தேன் சார்...
யூ நோ சார் டைம் ஆனதே தெரியல .......
அப்புறம் எப்படிமா கடைசியாக திருடன் கிளம்பும் பொழுது திருடன் திருடன்னு கத்தினீங்க?
அது ஏன் கேக்குறீங்க சார்? திருடன் கிளம்பும்போது கடைசியா இன்டர்நெட் ரூட்டரையும் திருடிட்டான் சார்! இன்டர்நெட் கனெக்சன் கட்டானதுனால 😒😒
லைக் கமெண்ட் நின்னு போச்சு சார்..... நிமிர்ந்து பார்க்கிற மாதிரி ஆச்சு ....
May be an image of 4 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...