Saturday, June 18, 2022

பகுத்தறிவுவாதிகளே ...

 பகுத்தறிவு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவியேற்ற ஸ்டாலினுக்கு தெரியாது அன்று

சனாதன தர்மம் அண்ணாமலை குப்புசாமி என்ற ரூபத்தில் ஆட்சிக்கு கண்டத்தை ஏற்படுத்தி
விழி பிதுங்க வைத்து தட்டாமலை சுற்ற வைக்கும் என்று.
பாராளுமன்றத் தேர்தலில் பகுத்தறிவு
39 திமுக கூட்டணி எம்.பிக்கள் வென்றும்
சனாதன தர்மத்தின் வழி ஆட்சி நடத்தும் இந்து மன்னனை
அசைக்க முடியவில்லை .
காலம் சரியாகத் தான் கணக்கிடுகின்றது ...
இந்திய திருநாட்டை ஆளும்
ஊழலற்ற மாமன்னனை
கர்மயோகியை
கோபேக் என்று சொல்லி பாரதத்தின் பிதாமகனை அவமானப்படுத்துவதாக எண்ணி அகம் மகிழ்ந்து
தமிழகத்தை அசிங்கப்படுத்தினார்களோ அன்றே சனாதன தர்மம்
இவர்களுக்கு நாள் குறித்து விட்டது ..
ஆம் அது இரண்டு வகையில்
ஆட்டத்தை தொடங்கி விட்டது ..
ஒன்று உச்சிக்கு ஏற்றி
உயிரை வதைப்பது...
இன்னொன்று ஆடவிட்டு அடிப்பது ...
எவரை கோபேக் என்று சொல்லி எதிர்கட்சி தலைவராக கூட்டணியோடு கலகம் செய்தார்களோ
அவரை கம் கம் என்று
பூங்கொத்து சால்வை அணிவித்து மரியாதை தந்து வரவேற்க நிற்க வைத்தது ..
இன்னொன்று
மெஜாரிட்டியை தந்து வெல்ல வைத்து
உன் மெஜாரிட்டி எங்களுக்கு தேவைப்படவில்லை என்று சொல்லி ஆப்பு வைத்து
மத்தியில் ஆளும் கட்சிக்கு
அதை விட அதிக மெஜாரிட்டியை தந்தது !
இது தான் சனாதன தர்மம் ...
பகுத்தறிவை ஓங்கி செவினியில் அறைந்து
வேடிக்கை காட்டியது ...
பாராளுமன்றத்தில் ...
39 வென்றும்
வெறும் கூச்சலை தவிர
வெற்றி பெற்ற பயனின் உள்நோக்கம்.
பயனற்று புஷ்வானமாகி போனது.
இது தான் அதர்மத்தை தர்மம் ஆடவிட்டு
தலையில் ஓங்கி குட்டுவது ..
பொய்கள் ஆயிரம் சொல்லி
செங்கல்லை காட்டி
அதிகாரத்தை கைப்பற்றியது
அனைத்துமே
செல்லாக்காசாகி போனது
அதே காவிச் செங்கல் தலைமையால் ...
இதை தான் தர்மம் நின்று கொல்லும் என்பார்கள் ..
பேருந்து வேன் வைத்து
குவாட்டர் கோழி பிரியாணி
தலைக்கு முந்நூறு
கொடுத்து கூட்டிய கூட்டமல்ல
நீங்கள் பழித்த ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு
கூடிய. கூட்டம்..
சத்திய வழியில் வந்த
ஊழலற்ற காவித் தலைவனுக்கு
நேர்மைக்கு என்றுமே அழிவில்லை என்று உணர்த்திய
சனாதன தர்மத்திற்கு
கூடிய கூட்டம் அது !
தமிழகத்தில்
தாமரை மலராது என்று கூவி
வெற்றுக் கூச்சலிட்ட திராவிடத்தின் வெற்றியை
தவிடு பொடியாக்கி
அனைத்து பகுத்தறிவுவாதிகளையும்
கலங்கடித்து
கர்நாடக சிங்கமென பெயரெடுத்து
கரூரில் பிறந்து வளர்ந்த
காவித் தலைவனுக்கு
கூடிய கூட்டத்தை பார்த்து
கண்டபடி வசைபாடி
அநாகரீகமாக அறிக்கைகளை விட்டு கதற வைத்தது தான் காலத்தின் கோலம் .
மாடுகட்டி போரடித்தால்
போதாது செந்நெல் என்று
யானை கட்டி போராடித்த
தமிழகத்தை
திராவிட மண் என்று சொல்லி
டாஷ்மார்கை ஊரெங்கும் திறந்து வைத்து போதையில்
தள்ளாட வைத்து
கொலை கொள்ளை என்று
குடிகார மண்ணாக்கிய
பகுத்தறிவை
சனாதன வழி நடக்கும்
ஆட்டுக் குட்டி அண்ணாமலை
ஆட்டி படைப்பார் என்று
கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் ...
பொறுக்கிகளை
பொறுக்கி பொறுக்கி நொறுக்கி எடுத்து
திராவிடத்தின் குடுமியை
பிடித்தாட்டும்
அண்ணாமலை திராவிட பொறுக்கிகளுக்கு பொறுக்கி தான் ...
பெரியாரின்
கடவுள் மறுப்புக் கொள்கையை சொல்லி
ஆண்டாளை
முருகனை
சிவனை
ராமரை
விநாயகரை
ஏழுமலையானை
அவமதித்த திராவிடத்தை
ஓடவிட்டு
தாமரை மலர்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து
பாருங்கள்
பகுத்தறிவுவாதிகளே ...
இதை தர்மத்தை பாதுகாக்க நினைக்கும்
ஒவ்வொரு இந்துக்களும்
சனாதனத்தின் மீது
சத்தியம் செய்து சொல்கிறோம் ......
தமிழகம் ஆன்மீக பூமி தான்!
இனம் மொழி கடந்து தேசியவாதிகளாக
தேசாபிமானிகளாக இதை உரக்க சொல்வோம் ...
ஆம் உரக்கச் சொல்வோம்.
ஜெய்ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...