ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சிலர்
நூபுர் சர்மாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறைகளில் ஈடுபட்டோருக்கு எதிராக
உத்தரபிரதேச அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இதில் உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று
உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணாவிற்கு கையெழுத்து இட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
இதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விஷயங்கள்,
* உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிப்பவர்களைக் குறிப்பாக இதில் ஈடுபட்டுள்ள "உயர்மட்ட அளவிலான காவல் துறை அதிகாரிகள், மாநில அதிகாரிகளை" கைது செய்ய உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் (?????)
* இஸ்லாமியர்களை கைது செய்து கொடூரமாக தாக்குவது தேசத்தின் மனசாட்சியை உலுக்குகிறது.
* போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டம் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தாமல்(?) உத்தரப் பிரதேச மாநில அரசு நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது வன்முறையை ஏவி விடுகிறது.
* போராடுபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் 1980, உத்தரப் பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1986-ன் படி நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேசம் வழிகாட்டியுள்ளது.
* இது போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டவிரோதமாக துன்புறுத்தவே வழிவகை செய்யும்(?).
* ஆளும் அரசின் கொடுரமான மிருகத்தனமான இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.
* இது நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான கொடூரமான ஒடுக்கு முறை ஆகும்.
கலவரகாரர்களை நல்லவர்களாகவும், நடவடிக்கை எடுக்கும் அரசை குற்றவாளி என்றும் சொல்லி ஒருதலைபட்சமாக கடிதம் எழுதியுள்ள முன்னாள் நீதிபதிகள் தங்களது உத்யோக காலத்தில் வழங்கியுள்ள தீர்ப்புகள் அனைத்தையும் மறு விசாரணை நடத்தி ஆராயவேண்டும்.
ஏனெனில் இவர்கள் தர்மம் நியாயத்தை மனதில் கொண்டு தீர்ப்பு வழங்கியிருப்பார்களா என்ற சந்தேகமே மேலோங்குகிறது.
"கலவரகாரர்களின் குறைகளை கேட்டு அதை களைந்து, அவர்கள் அமைதியாக போராட அரசு அனுமதிக்க வேண்டும். அது மக்களின் ஜனநாயக உரிமை."
ஏனுங்க ஆபிசர்களா,
முன் கூட்டியே திட்டமிட்டு ஆயிரம் பேர கூட்டி கூச்சல் போட்டு, பொதுசொத்துகள், காவலர்களை கல்வீசி தாக்கறது ஜனநாயக உரிமையின் கீழ் வருமா?
தனிப்பட்ட நோக்கங்களுக்காக போராட்டம் நடத்தறவங்க, அவங்களுக்கு சொந்தமான கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் அடுத்தவங்களை கடையடைக்க சொல்லி கட்டாயப்படுத்தறதோ, மறுத்தால் கல்வீசி அவங்க கடைகளை சேதப்படுத்துவதோ மனித உரிமையின் கீழ் வருமா?
ஜனநாயக நாட்டில் தேசிய பாதுகாப்பு சட்டமும், கலவர தடுப்பு சட்டமும் தவறாக மட்டுமே பயன்படுத்துவார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்திருந்தால், அந்த புன்னாக்கு சட்டங்களை நீக்குவதற்கு, நீங்கள் மக்கள் வரிபணத்தை சம்பளமாக வாங்கி குவித்த போதே தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருக்கலாமே? நோட்டை எண்ணுற வேலையில் நேரம் கிடைக்கலையோ?
காவல்துறை ஆரம்பத்திலேயே லத்தியை சுழற்றுவதில்லை என்றும், முடிந்தவரை அதிகாரிகள் மட்டத்தில் போராட்டகாரர்கள் கோரிக்கை மீது சட்டபடி நடவடிக்கைகள் எடுக்கபடும் என்ற உத்தரவாதம் கொடுத்து, முதலில் அமைதியாக கலைந்து போகவே அறிவுறுத்துவார்கள் என்ற அடிப்படை அறிவு உங்களுக்கு இல்லையா?
எவ்வளவு அமைதிபடுத்தியும், நம்பிக்கை வார்த்தைகளை பேசியும் செவி மடுக்காமல் கல்வீச்சு, தீவைப்பு, துப்பாக்கி சூடு நடத்துபவர்களை எப்படி கையாளுவது ஆபிசர்களா?
காவல்துறை அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கலவரகாரர்களின் கால்களில் மண்டியிட்டு கெஞ்ச வேண்டும் என்று சொல்லறீங்களா ஆபிசர்களா?
கலவரகாரர்களின் வன்முறையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு நீங்கள் என்ன ஆறுதல் சொல்வீர்கள்?
"காந்தியை போல, உங்களது சகோதரர்கள் தாக்கும் போதும், கொல்லும் போதும் சகித்து கொள்ளுங்கள் என்றா?"
நல்லா இருக்கு சார் உங்க நியாயம்?
"135 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் ஆயிரம் இடத்தில் ஐநூறு ஐநூறு பேராக கூடி அரசாங்கத்தை முடக்கும் விதமாக டார்கெட் செய்து போராட்டம் நடத்துவாங்க, வன்முறை செய்வாங்க
அரசாங்கம் இவங்க ... உருவி விட்டு, கெஞ்சி கூத்தாடி, அவங்களா கலைந்து போக ரெண்டு, மூனு வருஷம் ஆனாலும், அதுவரை அவங்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுத்து தூரமா கையை கட்டி காத்திருக்கனும்."
"இந்த டேஷுக்கு பேர் தான் ஜனநாயகம் என்றால், அந்த ஜனநாயகமே தேவை இல்லை."
என்ன காரணத்திற்காக போராட்டம் செய்தாலும் அது அகிம்சை வழியில் அமைதியாக நடத்தபட வேண்டும்.
ஆனால் அமைதியாக நடக்க மாட்டோம், பொது சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களை காயப்படுத்தி, பொது அமைதியை குலைக்கும் விதமாக கல்வீசி, கடைகளுக்கு தீவைத்து கலவரம் செய்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்பதற்கு அரசாங்கம் எதற்கு?
முன்னாள் நீதிபதிகள் என்பதற்காக அவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. எவரையும் விமர்சிக்க நீங்கள் பேசும் அதே ஜனநாயகம் எனக்கும் உரிமை கொடுத்துள்ளது.
"ஹிஜாப் போன்ற வழக்குகளில் தீர்ப்பு எழுதுவதற்கு முன்பு
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாக்கிங் போன நீதிபதி மேல் வாகனம் மோதி கொல்லப்பட்ட சம்பவத்தை ஞாபகம் வச்சிக்கோங்க"
என்று பல நகரங்களில் நடந்த ஹிஜாப் தீர்ப்பு எதிர்ப்பு போராட்டங்களில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அமைப்புகளையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பேசுங்கள்.
தங்களது குதர்க்கமான யோசனைகளால் உத்தரபிரதேச அரசுக்கு எதிராக தவறான நடவடிக்கைகளை எடுக்க கோரி கடிதம் எழுதியுள்ள முன்னாள் நீதிபதிகள் கையாண்ட வழக்குகளில் இவர்கள் வழங்கிய தீர்ப்புகள் குறித்து ஆராய வேண்டும் என்றும்
அதேபோல் இந்த கடிதத்தில் கையெழுத்து இட்ட மூத்த வழக்கறிஞர்களை தங்களது தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் மக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும்.
இந்திய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக மாற்றி எழுதபட வேண்டிய அவசியம் வந்து விட்டது.
135 கோடி மக்கள் வாழும் நாட்டில் அமைதி நிலவ செய்ய வேண்டும் என்றால் தேசத்தின் சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
அதிகப்படியான சுதந்திரம் ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும்.
கட்டுப்பாடான ஜனநாயகமே மக்களையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும்.
"கலவரகாரர்களை கண்டிக்க துப்பில்லாத எவருக்கும் ஜனநாயகம் பற்றி பேச தகுதியில்லை."
இவர்களை போன்றோர் தான்
"ஒற்றை கண் ஜனநாயகவாதிகள்"
No comments:
Post a Comment