Thursday, June 16, 2022

இறைவனின் அழகியப் படைப்பு பெண்கள் தான்...

 ஆண்களே சற்றுப் பெண்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...

பெண் ஆணை விடக் கிட்டத்தட்ட இருபது சதவீதம் எடைக் குறைவு. அவனைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைவு . இதயமும் சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் ஆணை விடச் சின்னது. வியர்வை அதிகம் வரும் .
சின்ன வயதிலிருந்தே ஆணை விட அவள் அதிகம் புன்னகை செய்கிறாள். ஆணை விடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள். சின்னக் குடைகள், சின்னப் பர்ஸ்கள், கைக்குட்டை கூட சின்னது. சைக்கிள், ஸ்கூட்டி போன்ற சின்ன வாகனங்கள். இப்படியே அவள் பயன்படுத்தும் அத்தனையும் சிறியதே.
புத்தகங்களை எப்போதும் பெண் நெஞ்சோடு தான் அணைத்துச் செல்வாள். ஆண்களைப் போல் பக்கவாட்டில் இல்லை. அவளுடைய எலும்பு அமைப்பு நளினமானது. தசை நார்கள் முப்பது சதவீதம் வலிமை குறைவு. தொண்டை சின்னது. அதனால் கீச்சுக்குரல், இடுப்புக்குக் கீழே கொஞ்சம் (பிறப்புக்கு வழி பண்ண) பெரிசாக இருக்கும்.
அவள் ரத்தத்தின் அடர்த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹீமோக்ளோபின் குறைவு. நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள். அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவதில்லை.
மாதவிலக்கின் போதும், கர்ப்பக் காலத்திலும் அவள் நிறைய கால்சியம் இழக்கிறாள். அதனால் தைராய்ட்ட சுரப்பி பாதிக்கப்பட்டு எண்டாக்ரின்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவள் ஆணை விடக் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறாள்.
அதிகம் அழுகிறாள். அதிகம் சிரிக்கிறாள். அதிகம் கவலையும் கொள்கிறாள். ஆயுட்காலம் ஏறக்குறைய ஆண்கள் அளவு தான். ஆனால் அதிக தினங்கள் உடல்நலமில்லாமல் இருக்கிறாள். தன்னை ஒழுங்காகக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நாட்கள் தான் அவளுக்கு அதிகம். போதுமா.. ? இத்தனை அம்சங்கள் அவளுக்குள் இருப்பதால் தான் அவள் ஆணைச் சார்ந்திருக்கிறாள்.
இவ்வளவு கஷ்டத்துடன் தான் பெண்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தோடு பின்னிப் பிணையப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெண் தன் கணவனுடைய.. தந்தையின்.. சகோதரனின்.. ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறாள். கிடைக்காத போது உணர்ச்சி வயப்படுகிறாள்.
எனவே பெண்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...