I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, June 16, 2022
வெள்ளைக்கருவும் அதிகம் வேண்டாம்.
முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உள்ளன. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் 16 கலோரி உள்ளது. அதில் கொழுப்பு இல்லை. ஆனாலும் வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிடும்போது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், தும்மல், மூச்சுத்திணறல், சருமத்தில் தடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். கோழிகளின் உடலில் காணப்படும் சால்மோனெல்லா எனும் பாக்டீரியாவால் முட்டையின் வெண் படலத்திற்கு தீங்கு நேரலாம். அந்த பாக்டீரியா முட்டை ஓடுகளின் உள்புற மற்றும் வெளிப்புற பரப்புகளில் படர்ந்திருக்கலாம். சால்மோனெல்லாவை நீக்குவதற்கு நீண்ட நேரம் மற்றும் அதிக வெப்பநிலையில் வேகவைக்க வேண்டும். இல்லாவிட்டால் முட்டையின் மேல் பகுதியிலும், குறைவான வெப்பநிலையில் வேகவைத்த முட்டைகளிலும் அந்த பாக்டீரியாக்கள் படிந்திருக்கும். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.முட்டையின் வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் பயோட்டின் குறைபாடும் ஏற்படலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் அவிடின் எனும் புரதம் உடலில் உள்ள பயோட்டினை கரைத்துவிடும். அதில் உள்ள அல்புமின், உடலில் உள்ள பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக சரும பிரச்சினைகள் ஏற்படலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள் அதிகம் உள்ளன. மருத்துவர்களின் கருத்துப்படி, சிறுநீரக பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அதிக அளவு புரதம் சாப்பிடுவது ஆபத்தானது. சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 0.6 முதல் 0.8 கிராம் வரையிலான புரதத்தையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் தினமும் ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கலாம். கல்லீரல் பாதிப்பு கொண்டவர்கள் வெள்ளைக்கருவை தவிர்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment