நமது மனமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் மாறிக்கொண்டே தான் இருக்கும்.
மனம் எதையும் நிலையாக விரும்புவதும் இல்லை... வெறுப்பதும் இல்லை.
இன்று விரும்புவதை நாளை வெறுக்கலாம்.
இன்று வெறுப்பதை நாளை விரும்பலாம்.
இன்று வேண்டும் என்று சொல்வதை நாளை வேண்டாம் என்று சொல்லலாம்.
இன்று வேண்டாம் என்று சொல்வதை நாளை வேண்டும் என்று சொல்லும் நிலையும் வரலாம்.
எது கிடைக்கவில்லை என்று ஏங்குகிறோமோ அது கிடைத்த பின் வெறுக்கும் நாளும் வரலாம்.
ஆகவே நிலையில்லா இவ்வுலகில் நிலையில்லாத கவலைகளை கண்டு துவண்டு விடாதீர்கள்.
எதுவும் நிரந்தரம் இல்லை.
இந்த பூமியில் வாழக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை
நல்லவிதமாக பயன்படுத்துவோம்.இயன்றவரை பிறருக்கு உதவி செய்து
முடிந்தவரை மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டுச் செல்வோம்.
No comments:
Post a Comment