Wednesday, June 15, 2022

சிறுதாவூர் பங்களாவில் சசிகலா ரகசிய ஆலோசனை!

 பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, அ.தி.மு.க., பொதுக்குழுவில் குரல் கொடுக்க, தென் மாவட்டத்தினரை களமிறக்குவது தொடர்பாக, சசிகலா தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.


இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கட்சியில் ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில், பொதுச் செயலர் பதவியை பழனிசாமிக்கும், அவைத் தலைவர் அல்லது பொருளாளர் பதவியை பன்னீர்செல்வத்திற்கும் வழங்கி, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற, பழனிசாமி ஆதரவாளர்கள் தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.

அதற்கு முன்பாக, கட்சியின் 75 மாவட்டங்களில், பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலர்களை தவிர, மற்ற மாவட்டங்களில் ஆதரவு தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இன்னொரு பக்கம், பொதுச் செயலர் பதவி காலியாக இருப்பதால், அப்பதவிக்காக சட்ட ரீதியாக சசிகலா உரிமை கோருகிறார்.அதற்கு இடம் அளிக்கக் கூடாது என்பதற்காக, 'அதிகாரமிக்க பொதுச் செயலர்' என்ற ஒற்றை பதவியை உருவாக்க வேண்டும் என, தீர்மானத்தில் குறிப்பிடும்படி, பழனிசாமி தரப்பில், மாவட்ட செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news



இதைத் தவிர, பொதுச் செயலர் அதிகாரத்தின் கீழ் செயல்படும் வகையில், கட்சி அறக்கட்டளை ஒன்று உள்ளது. அதில், 1,500 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, அந்த அறக்கட்டளைக்கு சசிகலா, அவரது உதவியாளர் ஒருவர், ஜெயலலிதாவின் உதவியாளர் ஒருவர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அந்த அறக்கட்டளையை, பழனிசாமி தலைமையில் மாற்றவும், புதிய உறுப்பினர்களை நியமிக்கவும், கட்சி தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த, அவரது ஆதரவாளர்கள் காய் நகர்த்த துவங்கி உள்ளனர்.அதனால், பழனிசாமிக்கு பொதுச்செயலர் பதவி கிடைக்க விடாமல் செய்ய, பன்னீர்செல்வம் வாயிலாக சட்டரீதியாகவும், கட்சி ரீதியாகவும் சில நடவடிக்கைககளை எடுக்க, சசிகலா திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவர், சென்னை அருகில் உள்ள சிறுதாவூர் பங்களாவில், பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளார்.ஒற்றை தலைமை முடிவை பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவருக்கு ஆதரவாக, பொதுக்குழு உறுப்பினர்களை செயல்பட வைக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் இருந்து, அ.ம.மு.க.,வினரை பொதுக்குழுக் கூட்டத்திற்கு அனுப்பி வைத்து, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, ஒற்றை தலைமை முடிவை கைவிட வைக்க வேண்டும் என, சசிகலா தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...