தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர்.
அது.. Tராஜேந்தர்
ஒருதலை ராகம் இவரின் முதல் படம்
நாயகனும், நாயகியும் தொடாமலே காதல் செய்த படம் ஃ இன்றும்
தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் இதுவும் ஒன்று ஃ
கதை
வசனம்
இசை
பாடல்கள்
எடிட்டிங்
ஒளிப்பதிவு
நடிப்பு
தயாரிப்பு
என அனைத்து வேலைகளையும் தெரிந்த அஷ்டாவதனி. இவர்.
அடுக்கு மொழி வசனம் இவரது படங்களில் ஸ்பெசல் .
இவரது படங்களின் பாடல்களில் செட்டிங் குகள்
அழகானவை.
இளையராஜாவின் பாடல்கள்
பேசப்பட்டப் போது
இவரது இசையும் ரசிக்க வைத்தது.
ரஜினி படங்கள் ரீலிஷான போது
இவரது படங்களும் போட்டியிட்டு
வெற்றி பெற்றது.
சினிமாவில் இன்று வரை கதாநாயகிகளை தொடாமல் நடித்த ஒரே நடிகர் இவர்தான். தங்கச்சி ஃ தங்கச்சி என்று தங்கச்சிகளை தங்கமாக தாங்கியது இவர் படததில்தான்.
தனது படங்களின் பெயர் எழுத்துக்கள் ஒன்பதில் முடியும் சென்டிமெண்ட் இவருக்கு உண்டு.
உயிருள்ளவரை உஷா
உறவைக் காத்த கிளி
என் தங்கை கல்யாணி
ஒரு தாயின் சபதம்
என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்கள்.
தனது மகன் சிம்புவை வைத்து
எங்க வீட்டு வேலன் என்ற படம் அன்றே
ஹிட் அடித்த வரலாறு.
சிறந்த தன்னம்பிக்கைக்கு இவரே உதாரணம்.
அதிக திறமையும் அடி சறுக்கும்
என்பதற்கு இவர் எடுத்த வீராசாமியே சாட்சி.
சினிமாவில் இருந்தாலும் எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்.
தாடியோடு நடித்து
சினிமாவில் அழகு தேவையில்லை
திறமை போதும் என்பதற்கு இவரே உதாரணம். ஜீவிதா | அமலா, நளினி | மும்தாஜ் ராஜீவ்.கங்கா என இவர் அறிமுகங்கள் பலர். தன் படங்களுக்கு மட்டும் அல்ல கிளிஞ்சல்கள் , கூலிக்காரன் என அடுத்தவர்கள் இயக்கத்துக்கும் இசை அமைத்தவர்.ஜூலி ஐ லவ் யூ ,குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம், வைகறை காத்தே நில்லு .எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி என பல பாடல்கள் இன்றும் காதில் ரீங்காரமிடுகிறது. அடுக்கு மொழி வசனங்களை அசாத்தியா மாக சொல்பவர். டன் டண்டனாக்கா என பாடல்களும், வசனங்களும் பட்டைய கிளப்பிய காலம் உண்டு.
தனி மனித ஒழுக்க சீலர்.
இவரது மகன் சிம்பு இதற்கு நேர் எதிர் .
அந்த காலத்தில் இவரது பெயரை பச்சைக் குத்திய ரசிகர் ரசிகைகள் ஏராளம்.
தனது குழந்தைக்கு இவரது பெயரை T.ராஜேந்தர் என வைத்தவர் இன்னும் எங்கள் ஊரில் இருக்கிறார்.
இவருக்கும் வெறித்தனமான ரசிகர்கள்
இன்றும் இருக்கிறார்கள்
அதனை இந்த பதிவிற்க்கு பிறகும் கமெண்ட் டில் பார்க்கலாம்
காலத்தால் மறக்க முடியாத கலைஞன்
தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு இடம் இன்றும் உள்ளது.
நன்றி.. உங்களில் ஒருவன்
தங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.. உங்களில் ஒருவன்
No comments:
Post a Comment