Sunday, October 2, 2022

பச்சோந்தி திருமாவை ஓரங்கட்டுங்கள்!

 தமிழகத்தில், காந்தி ஜெயந்தி தினமான நேற்று, 50இடங்களில் பேரணி நடத்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு திட்டமிட்டு இருந்தது. இதற்கு, விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றமும் தெரிவித்திருந்தது.


ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு தடை கோரி நீதிமன்றம் சென்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 'ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடைபெற்றால், வன்முறை நிகழும்' என்று தெரிவித்தார். அது மட்டுமின்றி, அதே நாளில், தங்களின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதச் சங்கிலி நடத்தும் என்றும் அறிவித்தார்.

இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரலாம் என்பதால், ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கும், வன்முறைக்கும் என்றுமே தொடர்பு இருந்தது கிடையாது. ஜாதி, மத வெறியை மக்களிடையே துாண்டி, அரசியல் ஆதாயம் அடைந்து வரும் திருமாவளவனின் கட்சியினர் தான், பல நேரங்களில் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதை, தமிழக மக்கள் நன்கறிவர். தி.மு.க.,வின் வால் நுனியை பிடித்துக் கொண்டு தொங்கும் இவருக்கென, தனி லட்சணையும் கிடையாது; லட்சியமும் கிடையாது.

தேர்தல் சமயத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி, அறிவாலயத்தின் வாசலில் நிற்பார்.ஒரு சீட்டோ, ரெண்டு சீட்டோ கிடைக்கும்... அவ்வளவு தான். இவரை தலைவராக ஏற்ற பட்டியலின மக்கள், இதுவரை எந்தப் பலனும் அடைந்ததில்லை... பாவம்! பட்டியல் இன மக்களின் காவலன் என தன்னை பீற்றிக் கொள்ளும் திருமா, தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி, ராஜ கண்ணப்பன், பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்றவர்கள், பட்டியலினத்தவரை அவமானப்படுத்திய போது வாயே திறக்கவில்லை; குறைந்தபட்சமாக கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.


latest tamil news



அப்படி கண்டனம் தெரிவித்தால், அடுத்த தேர்தலில், 'சீட்' என்ற பிச்சை தி.மு.க.,விடம் இருந்து கிடைக்காது என்ற பயம். தேர்தல் சலுகை பெறுவதற்காக, ஒரு முகத்தை ஹிந்துவாகவும், மற்றொரு முகத்தை கிறிஸ்துவர் ஆகவும் மாற்றி மாற்றி காட்டும் கிறிப்டோ கிறிஸ்டியன் இவர். ஹிந்து சனாதன தர்மத்தின் வேரை அறுப்பதாக சொல்லித் திரியும் இவருக்கு, அதன் வேர் எங்கே இருக்கிறது என்று அறியவே பல பிறவிகள் தேவை.

என்ன தான் இவர், தி.மு.க.,விற்கு துதி பாடினாலும், இவருக்கு கிடைப்பது என்னவோ 'பிளாஸ்டிக் சேர்' தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரதான கொள்கை என்னவென்றால், 'அடங்க மறு, அத்து மீறு, திமிரி எழுவோம், திருப்பி அடிப்போம், வாள் கை மாறினால் வாழ்க்கை மாறும்' போன்றவை தான்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அப்படிப்பட்டதல்ல. தேசியத்திற்கும், தெய்வீகத்திற்கும் தன்னை அர்ப்பணித்த இயக்கம்.எனவே, தமிழக அடித்தட்டு மக்களே, திருமா போன்ற பச்சோந்திகளை இனம் கண்டு ஒதுக்குங்கள். அப்போது தான், மாநிலமும் முன்னேறும்; நீங்களும் முன்னேறுவீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...