Monday, October 3, 2022

வாழ்க்கை ஒரு வரம் .

 எதுவுமே இல்லாவிட்டாலும் சிலர் வாழ்க்கையை கொண்டாடுகின்றனர். எல்லாம் இருந்தும் சிலர் வாழ்க்கையை சபிக்கின்றனர்.

காரணம் அவர்களது எண்ணங்கள்.
எப்பொழுதும் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினமானதாக தான் இருக்கும். நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
இந்த நிமிடம் இந்த நொடியில் வாழுங்கள்.
பார்க்கும் அனைத்தையும் ரசியுங்கள். காணும் அனைத்திலும் கடவுளை உணருங்கள்.
அப்பொழுது உங்களைப்போல் மகிழ்ச்சியாக வாழ யாராலும் முடியாது.
இறைவன் இந்த பூமியை படைத்தது நாம் அனுபவிப்பதற்காகவே.
ஒவ்வொரு நாளையும் ஒரு வாய்ப்பாக கருதி முன்னேறிச் செல்லுங்கள்.
கடந்த காலத்தை மாற்ற முடியாது.
எதிர்காலத்தை இறைவனிடம் ஒப்படைத்து விட்டு சரணடைந்து விடுங்கள்.
ஒருவேளை சோதனைகள் வந்தாலும் இறைவன் நிச்சயமாக உங்களை கைவிடமாட்டார்.
கைப்பிடித்து கரையேற்றி விடுவார்.
இறை நம்பிக்கையுடன் நீங்கள் ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது
நடப்பது அனைத்தும் நீங்கள் நினைப்பதை விட மிகச் சிறப்பாக இருக்கும்.
உங்கள் மனதால் நல்லதே நடக்கும் என்று உறுதியாக நம்புங்கள்.
நிச்சயமாக நல்லது மட்டுமே நடக்கும்.
நேர்மறையான சிந்தனைகள் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவை.
இனி நடப்பது அனைத்தும் நல்லதாக நடக்கட்டும்.
உங்கள் வாழ்க்கை செழிக்கட்டும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு
வாழ்த்துக்கள்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...