யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டிருந்த வேண்டுமா?
ஒருவர் சொல்வது தவறென்றால் சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு.
ஹிந்து மதத்தைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் யார் பேசினாலும் நான் பதில் கொடுப்பேன்.
நான் சோ அவர்களின் ஹிந்து மகா சமுத்திரம் முழுமையாகப் படித்தவன். கண்ணதாசனின் அர்த்தமுள்ள ஹிந்து மதம் படித்தவன். நான் பேராசிரியர் அவர்கள் துக்ளக்கில் எழுதிய இஸ்லாம் மதம் பற்றியும் படித்திருக்கிறேன். கிருத்துவ மதம் பற்றியும் படித்திருக்கிறேன்.
எந்த மதமும் மற்ற மதக் கோட்பாடுகளை இழிவு படுத்த வேண்டும் என்று செல்வதில்லை.
ஒரு வழக்கத்தை கடைப் பிடிக்க முடிந்தால் செய். இல்லா விட்டால் கேலி செய்வது, யாரையோ திருப்திப் படுத்தப் பேசக் கூடாது.
No comments:
Post a Comment