தயவுசெய்து பொம்பள பிள்ளைகளை ஒரு மணிநேரம் இரண்டுமணி நேரத்தில் சொந்த ஊரை சென்றடையும் தூரம் வரை இருந்தால் மட்டுமே கட்டி கொடுங்கள்
பயணம் சார்ந்த தூரம் என்பதால் பல நல்லது கெட்டதுக்கு நேரத்திற்கு செல்ல முடிவதில்லை என்பது வேதனை அளிக்கிறது
அதனைவிட கொடுமை உடன்பிறந்தவன் நம்மிடம் பேச கூட மனைவி பர்மிசன் தருவது கொடுமை
நான் என்று சென்னைக்கு புகுந்தவீடாக வந்தேனோ அன்று முதல் இன்றுவரை எனது தாய் தகப்பன் வீட்டில் கூட போய் ஒரு நாள் தங்கியது இல்லை
கஷ்டமோ நஷ்டமோ எதுவாகினும் எனது வீட்டிலேயேதான் கோபத்திலும் சரி சண்டையிலும் சரி ஒரே வீட்டில் மௌனவிரதமா இருப்பேனே தவிர எந்த உறவிடமும் போய் நான் தங்கியது இல்லை
தாய் உயிருடன் இருந்தவரை நல்லது கெட்டதுக்கு சென்றேன் அதுவும் ஆறு வருடமாக எங்கும் செல்லாமல் மருத்துவத்தில் அடைப்பட்டு கொண்டேன்
தற்போது முதன்முறையாக மகிழ்ச்சியுடன் தம்பியின் மகளுக்கு நான் அத்தைமுறை செய்ய போயே தீர வேண்டும் ஆனால் உறவுகள் நமக்காக காத்திருக்காது…. தம்பிக்கு நான் வர வேண்டும் என்று ஆவல் உள்ளது ஆனால் இவ்வளவு நாளாக செல்லாத கால்கள் செல்ல துடிக்கிறது
நாம் போவதற்குள் விழாவே முடிந்துவிடும்
தூரத்தில் மட்டும் பெண் குழந்தைகளை கட்டி கொடுக்காதீங்க 
No comments:
Post a Comment