அமைச்சர் காந்தியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, வேலுார் சரக டி.ஐ.ஜி., ஆனி விஜயா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.வேலுார் சரக டி.ஐ.ஜி., ஆனி விஜயா, நேற்று திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை; காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., சத்தியப்பிரியா, கூடுதல் பொறுப்பாக வேலுார் சரக டி.ஐ.ஜி., பணியை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனி விஜயா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதற்கு, கைத்தறித் துறை அமைச்சர் காந்தியுடன் ஏற்பட்ட மோதல் காரணம் என்று கூறப்படுகிறது.இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர் கூறியதாவது:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், மணல் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, இன்ஸ்பெக்டர் காந்தியப்பனை இடமாற்றம் செய்து, பத்து நாட்களுக்கு முன்பாக, டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்.
![]() |
இன்ஸ்பெக்டர் காந்தியப்பன், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர், அமைச்சர் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்கள். காந்தியப்பன் இடமாற்றம் தகவல் அறிந்ததும், டி.ஐ.ஜி.,யை தொடர்பு கொண்ட அமைச்சர், அவரது இடமாற்றம் உத்தரவை ரத்து செய்யும்படி கூறியுள்ளார்.அதை ஆனி விஜயா ஏற்கவில்லை. வாலாஜா போலீஸ் நிலையத்துக்கு, இன்ஸ்பெக்டர் சேதுபதி என்பவரை நியமித்து உத்தரவிட்டார். ஆனால், காந்தியப்பன் பணியில் தொடர்ந்ததுடன், புதிய இன்ஸ்பெக்டர் பதவியேற்க அனுமதிக்கவில்லை.அதைத் தொடர்ந்து மீண்டும் அமைச்சர், டி.ஐ.ஜி.,யை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
அப்போது, 'வேண்டுமானால், காந்தியப்பனை நீங்கள் கூறும் வேறு ஏதேனும் போலீஸ் நிலையத்தில் நியமிக்கிறேன். அதே போலீஸ் நிலையத்தில் முடியாது' என, ஆனி விஜயா கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தை, அமைச்சர் காந்தி, மேலிடத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக, ஆனி விஜயா, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதை அமைச்ர் தரப்பு மறுத்துள்ளதுடன், 'நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், டி.ஐ.ஜி., துரித நடவடிக்கை எடுக்காததால் மாற்றப்பட்டார்' என கூறுகின்றனர்.

No comments:
Post a Comment