மீசை ஏன் முளைக்கிறது.....
ஆணுக்கு தெரியாது.
பெண்மை ஏன் பூக்கிறது.....
பெண்ணுக்கு தெரியாது.
பற்கள் ஏன் முளைக்கிறது.....
மழலைக்கு தெரியாது.
மரணம் ஏன் அழைக்கிறது..
முதுமைக்கு தெரியாது.
மனிதன் ஏன் அழுகிறான்....
கடவுளுக்கு தெரியாது.
கடவுள் எங்கே இருக்கிறான்...
மனிதனுக்கு தெரியாது.
எல்லாருக்கும் எப்போதும்
எல்லாமும் தெரியாது.
இருந்தாலும் வாழ்கின்றான்....
ஏன் என்று தெரியாது..?

No comments:
Post a Comment