வயதான காலத்தில் மனைவியை இழப்பது,
உறவினர்களை நம்பிப் பணத்தை
இழப்பது,
நத்தையைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன் பிறக்கும் போதே சுமைகளும் நம் கூடப் பிறந்தது என்று.
தினமும் யாரோ ஒருவரின் மரணம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது இங்கு யாரும், எதுவும்,யாருக்கும் நிரந்தரமில்லை
என்று..!
நேரம் இல்லை என்று
சொன்னவர்கள் எல்லோரும் இன்று நேரத்தைக் கடத்த வழி
தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சந்தோஷமாக இருக்கும் போது
பாடலின் இசை பிடிக்கிறது..
துக்கமாக இருக்கும் போது
பாடலின் வரிகள் புரிகிறது..!
என் வாழ்க்கையில் நான்
சந்தோசமாக வாழ்கிறேன் என்பதை விட.. சமாளித்துக்
கொண்டு வாழ்கிறேன் என்பது தான் உண்மை.
நமக்கான ஆறுதல் நம்மிடம்
தான் உள்ளது மறந்துப் போவதும் கடந்துப் போவதும்.
நம் முன்னால் சொல்லப்படும்
பொய்யும்..
நமக்குப் பின்னால் பேசப்படும் உண்மையும் ஒன்றை மட்டுமே குறிக்கும்
துரோகம்..!
No comments:
Post a Comment