Thursday, August 11, 2022

நடிகர்கள் மீதும் பாய வேண்டும் அதிரடி!

 தமிழகத்தில் சினிமா தயாரிப்பாளர்களை குறிவைத்து, அவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத, 200 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, 26 கோடி ரூபாய் ரொக்கப் பணம், நகைகள், கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, பிரபல நடிகர், நடிகையர் வீடுகளில் சோதனை நடத்தினாலும், பல பேர் தங்கள் உண்மையான வருமானத்தை மறைத்து இருப்பது தெரிய வரும். சில நடிகர்கள் அறக்கட்டளை என்ற பெயரில், தங்களது உண்மையான வருமானத்தை மறைத்து, பேரும் புகழும் பெறுகின்றனர்.வருமான வரியை ஒழுங்காக கட்டிவிட்டார் என்று, நடிகர் ரஜினிக்கு பாராட்டு பத்திரம் வழங்கி உள்ளோம். இவரே தனக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு சொத்து வரி கட்டாமல் 'டபாய்த்ததை' ஊரறியும். வட்டிக்குப் பணம் கொடுத்து பிழைப்பு நடத்தியதாகவும், அதில் சிலர் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் இருப்பதாகவும், காரணம் காட்டியவரும் இவரே. சினிமாவில் உத்தமராக வேஷம் போடும் சினிமாக்காரர்கள் பலர், நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை. வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில், இறக்குமதி வரி கட்டாமல் நீதிபதியின் கடும் கண்டனத்திற்கு நடிகர் விஜய் ஆளானதை எல்லாரும் அறிவர். கறுப்புப் பணம் அதிகம் புழங்குவது, சினிமாக்காரர்களிடம் தான் என்பது உலகறிந்த விஷயம். சினிமாவில் ராமனாக நடிப்போரில் பலர், நிஜ வாழ்க்கையில் ராவணன்களாகவே இருக்கின்றனர். இன்னும் சிலர் சினிமாவில் சம்பாதித்தது போதாது என்று, அரசியலில் இறங்கி கட்சி துவங்கி, ஆட்சியை பிடிக்கவும் ஆசைப்படுகின்றனர். ஒரு படத்திற்கு, 20 கோடி, 30 கோடி என்று சம்பளம் வாங்கும் சினிமா நடிகர்கள் பலர், தங்களது உண்மையான வருமானத்தை காட்டி, வருமான வரி கட்டுவது இல்லை என்பதே நிதர்சனம். எனவே, நடிகர்களுக்கு எதிராகவும், வருமான வரித்துறையின் அதிரடிகள் தொடர வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...