திடீரென்று நாமே எதிர்பாராமல், நம்முடைய கைக்கு ஒரு பொருள் வந்து சேரும். அது பரிசு பொருளாக கிடைத்திருக்கலாம் அல்லது எங்கேயாவது கோவிலுக்கு செல்லும்போது நமக்கு தெரிந்தவர்கள் யாராவது நமக்கு அந்த பொருளை கொடுக்கலாம். எப்படியோ ஏதோ ஒரு வழியில் நம் கைக்கு எதிர்பாராமல் வந்த ஒரு பொருளின் மூலம் நம்மை அறியாமலே நமக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கும். உதாரணத்திற்கு நம்முடைய பெண் பிள்ளைக்கு யாரோ ஒருவர் புடவை வாங்கி தருவார்கள். நீண்ட நாட்களாக அமையாத திருமணம் அந்த புடவை வந்தவுடன் அமைந்திருக்கும். இவங்க கையால் புடவை வாங்கி கொடுத்த நேரம் தான் என் குழந்தைக்கு திருமணம் நடந்தது என்று நாம் பேசுவோம் அல்லவா. இப்படி பரிசு பொருளாக நம் கைக்கு வரக்கூடிய எந்தெந்த பொருட்கள் நமக்கு அதிக அதிர்ஷ்டத்தை தரும் என்பது உங்களுக்கு தெரியுமா. அதைப்பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. உங்களுடைய வீட்டில் திருமணம் காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் வைத்திருப்பீர்கள். அதற்காக உங்களுக்குத் தெரிந்தவர்கள் சுவாமி படங்களை உங்களுக்கு பரிசாக கொடுக்கலாம். இப்படி வரும் பரிசு பொருட்களில் அஷ்டலட்சுமி யின் திருவுருவப்படம், மகாலட்சுமியின் திருவுருவப்படம் உங்களுக்கு அன்பளிப்பாக வந்தால் நீங்கள் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. இப்படி பெறப்பட்ட அஷ்டலட்சுமி, மகாலட்சுமி திருவுருவப்படத்தை உங்கள் வீட்டின் வடக்கு திசை பார்த்தவாறு மாட்டி வைக்க வேண்டும். பூஜை அறையிலேயே வடக்கு பார்த்தவாறு வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லது. நிறைய பேர் பிள்ளையார் படத்தை வாங்கி பரிசாக கொடுப்பார்கள். அப்படி உங்களுக்கு பிள்ளையார் படம் பரிசாக வந்தால் அதை உங்களுடைய நிலைவாசல் படியில் மாட்டி வைக்கலாம். நிலைவாசல் படிக்கு உள்பக்கமும் மாட்டலாம். வெளிப்பக்கமும் மாட்டலாம். வீட்டிற்கு உள்ளே பார்தபடியும் மாட்டிக் கொள்ளலாம். வீட்டிற்கு வெளியே பார்த்தவாறும் மாட்டிக்கொள்ளலாம். இது தவிர மற்றபடி வேறு எந்த இறைவனின் திரு உருவப் படம் வந்தாலும் அதை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம். பரிசு பொருளாக பெற்ற சுவாமி படங்களை சில பேர் பூஜை அறையில் வைக்க மாட்டார்கள். ஆனால் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல உள்ளத்தோடு அடுத்தவர்கள் வாங்கிக் கொடுக்கக்கூடிய இப்படிப்பட்ட அன்பளிப்பை, நமக்கு பரிசு பொருளாக வரக்கூடிய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதில் எந்த தவறும் கிடையாது. அடுத்தபடியாக நந்தி. பெரும்பாலும் இதை பரிசு பொருளாக யாரும் யாருக்கும் அவ்வளவாக வாங்கிக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் யாருக்காவது பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், வெள்ளியில் இந்த நந்தியை வாங்கி கொடுங்கள். வாங்கி கொடுக்கக்கூடிய உங்களுக்கும் அது நிறைய நன்மைகளை செய்யும். இந்த நந்தியை பரிசு பொருளாக பெறுபவர்களுக்கு செல்வ செழிப்பு நிறைவாக இருக்கும். பரிசு பொருளாக நந்தி கிடைத்தால் அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்வது மிக மிக நல்லது. (வெள்ளித் தவிர மற்ற உலோகங்களில் நந்தி கிடைத்தாலும் அதை வாங்கி அடுத்தவர்களுக்கு பரிசு பொருளாக கொடுக்கலாம்.) அடுத்தபடியாக கோமாதா. பசுமாடு தன்னுடைய கன்றுடன் இருக்கும் படி கோமாதா சிலையை, காமதேனு சிலையை அல்லது படம் வாங்கி அடுத்தவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம். இது பரிசு கொடுப்பவர்களுக்கும் நன்மை தரும். பரிசை பெறுபவர்களுக்கும் நம்மை தரும். இப்படி அன்பளிப்பாக வந்த கோமாதா சிலையை பூஜை அறையில் வைத்து தினமும் அந்த கோமாதா சிலைக்கு பூஜை செய்து வந்தால் குடும்பத்தில் செல்வ கடாட்சம் பெருகும். இப்படிப்பட்ட பரிசு பொருட்கள் எதுவுமே எனக்கு வரவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இனிமேல் உங்கள் சொந்த பந்தங்களுக்கோ, உங்களின் நண்பர்களுக்கோ பரிசளிக்க வேண்டும் என்றால் மேல் சொன்னபடி இந்த பொருட்களை எல்லாம் வாங்கி கொடுங்கள். அடுத்தவர்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்று இப்படிப்பட்ட பரிசை கொடுக்கும் நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கும் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
No comments:
Post a Comment