முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும்
வேணுமா வேணுமா கேட்குறாங்க
அஞ்சாவது தோசை சாப்பிடும் போது
போதுமா போதுமா னு கேக்குறாங்க...
.
மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட
நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான்
ஆண்களுக்கு தேவையாம்...
.
சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க
அங்க போறதுக்கு அவனவன்
செத்துட்டு இருக்கான்...
.
ரேஷன் கார்டு photo 15 வருஷத்துக்கு
முன்ன நம்ம எப்படி இருந்தோம் னு காட்டுது.
ஆதார் 15 வருஷத்துக்கு அப்புறம்
எப்படியிருக்கோம் னு காட்டுது...
.
வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு
வெளுத்தாலும் வெளியில் புருசனுக்கு
பயப்படுற மாதிரி நடிக்குறதுல
எங்களை அடிச்சிக்க முடியாது...
.
உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான்
ஆகனும் -பழமொழி
கறியும் சோறும் திண்ணா
பல்லு குத்தி தான் ஆகனும்-புதுமொழி...
.
பட்டுச்சேலை கட்டுனா எல்லா பொண்ணுக்கும்
எடுப்பா தான் இருக்கும் ஆனா அதை
வாங்கித்தர புருசனுக்கு தான்
கடுப்பா இருக்கும்...
.
வாலிபங்கள் ஓடும், வயதாக கூடும்
ஆனாலும் பிரச்சனை குறையாதது...
.
நாம் அழுதால் நமக்கே பிடிக்காது
நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த
ஆண்டவனுக்கே பொருக்காது...
.
மாசத்துக்கு ஒரு நாள் தான் சம்பளம் தராங்க
ஆனா வேலை மட்டும் தினமும் தராங்க...
.
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
பொண்டாட்டிங்க திட்டியே கொல்லுவோம்...
.
கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு
செய்யும் "திதியும்" இறந்த பின்
அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது...!!
.
வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்
வசதி இருக்கிறவன்
நாய் மேய்க்கிறான்...
.
என்னதான் நாம வேலை வெட்டியில்லாம
இருந்தாலும், நமக்கு நாமே போன் பண்ணும்போது
பிஸியாதான் இருப்போம்...
.
யாரோ பெத்த புள்ளயை கல்யாணம் பண்ணி
காலம் முழுக்க சோறு போடும் அந்த
உயர்ந்த உள்ளம் தான் ஆண்...
.
அதிர்ஷ்டம் ambassador ல ஏறி வந்தா
பிரச்சனை Flight ஏறி வருது ச்சை...
.
கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும்
இல்ல முடி விழும் அவ்ளோதாங்க வாழ்க்கை...
.
காந்தி நாட்டுக்காக பாடு பட்டார்
நாம காந்தி நோட்டுக்காக பாடு படுறோம்...
.
கவர்மெண்ட் Exam லட்சம் பேர் எழுதுறாங்க
ஆனா லட்சம் கொடுக்குறவங்க தான்
select ஆகுறாங்க...
.
இந்த உலகத்துல நல்லவங்க கெட்டவங்கனு
யாரும் இல்ல நமக்கு புடிச்சா நல்லவங்க
புடிக்கலனா கெட்டவங்க...
.
முட்டி மோதி வாழ்க்கையில
முன்னேறலாம் னு பாத்தா ஒரே முட்டுல
கீழே தள்ளிவிட்டுறாங்க
.
எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா
பிரஷர் வரும்னு சொல்றாங்க
எதையும் சாப்பிடலைன்னா
அல்சர் வரும்னு சொல்றாங்க...
.
வாழ்க்கை சிக்கல் வந்தா நக்கலா
பாத்து சிரிக்கணும் புரிதா. .
No comments:
Post a Comment