Sunday, August 14, 2022

கைமாறியது செங்கோல்:கைக்கு வந்தது சுதந்திரம்.

 சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக, திருவாவடுதுறை ஆதினத்தின் செங்கோலை, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெற்று கொண்ட வரலாற்றை, 75-வது சுதந்திர தினத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுன்ட்பேட்டன், 'சுதந்திரம் அளிக்கப் போகிறோம். நீங்கள் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்கப் போகிறீர்கள். உங்களுக்கு யார் பதவி பிரமாணம் செய்து வைப்பார். 'சுதந்திரத்தை சிம்பாலிக்காக எப்படி பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?' என கேட்டுள்ளார்.
அதைக் கேட்டதும் நேருவுக்கு குழப்பம் ஏற்பட்டது. உடனே, ராஜாஜியிடம் இதுபற்றி ஆலோசித்தார். 'தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி பொறுப்பேற்கும்போது, ராஜகுருவாக இருப்பவர், புதிய மன்னருக்கு செங்கோல் கொடுப்பார். அதுவே ஆட்சி மாற்றத்தின் அடையாளம். 'அதுபோல, நாமும் ஒரு செங்கோலை, ஆங்கிலேயர்களிடம் இருந்து, நம் குருமார்கள் வாயிலாக பெற்றுக் கொள்வோம்' என ஆலோசனை கூறிஉள்ளார்.
அதை ஏற்றுக்கொண்ட நேரு, 'நேரம் குறைவாக உள்ளது, உடனே செங்கோலுக்கு ஏற்பாடு செய்யுங்கள்' என்று தெரிவித்து உள்ளார். ராஜாஜி, உடனே திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்தார். அவர், அந்த நேரத்தில் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார்.அதனால், தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை, இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் கொடுத்து, டில்லிக்கு அனுப்பி வைத்தார். உடன், ஓதுவார்களும் சென்றனர். கடந்த, 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி நள்ளிர வில், மவுன்ட்பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.

செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்' என துவங்கும், தேவார திருப்பதிகத்தை முழுதுமாக பாடினர்.'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்பதைப் பாடி முடிக்கும்போது, இளைய ஆதினம், செங்கோலை நேருவிடம் வழங்கினார்.

திருவாவடுதுறை ஆதீன மடத்தில், நேருவிடம், இளைய ஆதினம் செங்கோலை ஒப்படைக்கும் படம் வைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறையும் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தின்போது இந்த செங்கோல் முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.
கைமாறியது செங்கோல்:கைக்கு வந்தது சுதந்திரம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...