இந்து சமுதாயத்தைப் பொறுத்தவரை நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் போன்றவற்றை விரும்பி பக்தியுடன் அணிந்து கொள்வார்கள். இதனால் இறை சிந்தனையும், ஆரோக்கியமும், மன தெளிவும் உண்டாகும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? ஞாபக சக்திக்கு இந்த பொருள் எந்த வகையில் உதவும்? என்கிற வியக்கத்தக்க தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள். இரு புருவங்களுக்கு மத்தியில் பெண்கள் பொட்டு இட்டுக் கொள்வதன் மூலம் அவர்களுடைய ஆரா சக்தி அதிகரிக்கும் என்றும், இதனால் மனக்கட்டுப்பாடு, தைரியம் பெருகும் என்றும் கூறப்படுகிறது. அது போல திருமணமான பெண்கள் நெற்றியின் வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்கு பின்னாடியும் நிறையவே அறிவியல் தத்துவங்கள் ஒளிந்துள்ளன. காலில் மெட்டி அணிவது, மோதிர விரலில் மோதிரம் அணிவது போன்றவற்றிலும் கூட நரம்புகள் தூண்டப்பட்டு பல்வேறு பலன்கள் கிடைக்கப் பெறுகின்றன. நம் முன்னோர்கள் செய்து வந்த ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும், ஒவ்வொரு விதமான அறிவியல் காரணங்களும் மறைமுகமாக ஒளிந்து கொண்டிருக்கின்றன. அது போல தினமும் நெற்றியில் சந்தனம் வைத்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக கண்டறிந்துள்ளனர். சந்தனம் குளிர்ச்சியான ஒரு பொருள் ஆகும். இதை தினமும் நெற்றிக்கு இரு புருவ மத்தியில் வைத்துக் கொள்வதன் மூலம் சிந்தனை தெளிவாகும் சக்தி பெருகும் என்றும் கூறப்படுகிறது. நம் உடம்பில் இருக்கும் வர்ம புள்ளிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான தூண்டுதல்கள் இருக்கின்றன. வர்மக்கலையில் இப்புள்ளிகளை வைத்தே பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். ஹிப்னாட்டிசம் செய்யும் பொழுது நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியில் சுண்டுவிரலை வைத்து நீட்டி நேராக பிடிப்பார்கள். இப்படி நமக்கு பிடிக்கும் பொழுதே மனதில் ஒரு வகையான உணர்வு மலர ஆரம்பிக்கும். இந்த உணர்வு தியான நிலைக்கு கொண்டு செல்லும். இதனால் மனம் ஒருமுகப்படும். எவ்வளவு சிந்தனைகள் உங்கள் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தாலும், இவ்வாறு செய்யும் பொழுது அவை எல்லாம் சட்டென நின்று மனம் ஒருமுகப்படும். இதனால் சிந்தனை தெளிவாகும், எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை பெறும். சந்தனம், மூளையின் பின்பகுதியில் இருக்கும் ஞாபகங்களை தூண்டி விடக் கூடியது. இதனால் ஞாபக சக்தி பெருகும். அடிக்கடி மறந்து போகும் இளம் வயதினர் மற்றும் மாணவர்களுக்கு இது போல தினமும் நெற்றியில் சந்தனம் வைத்து அனுப்பி பாருங்கள், ஞாபக சக்தி மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கும். சந்தனத்தில் இயற்கையாக குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய தன்மை உண்டு. இந்த குளிர்ச்சி புருவ மத்தியில் இருக்கும் மையப் புள்ளியில் வைக்கும் பொழுது நரம்புகள் தூண்டப்பட்டு மூளை வரை அது பயணம் செய்கிறது. இதே போல குங்குமத்தை வைப்பதாலும் நிறையவே நன்மைகள் உண்டு. குங்குமம் படிகாரம், சுண்ணாம்பு, மஞ்சள் கொண்டு தயாரிக்கப்படும் கிருமி நாசினியாக இருக்கிறது. நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்பவர்களுக்கு ஹிப்னாடிசம் வேலை செய்யாது. ஹிப்னாட்டிசத்தை முறியடிக்க கூடிய சக்தி குங்குமத்திற்கு உண்டு. இதனால் காத்து, கருப்பு அண்டாது, துர்சக்திகள் நம்மை நெருங்காது என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். மன உளைச்சல், மன இறுக்கம் ஆகியவை நீங்க தினமும் காலையில் எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு மனதார இறைவனை பிரார்த்தித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் அல்லது விபூதி ஏதாவது ஒன்றை இட்டுக் கொள்ளும் பழக்கத்தை கொண்டு வந்து பாருங்கள், உங்களுக்குள் மாற்றம் நிகழும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment